கண் கலங்க வைக்கும் விஷாலின் நிலைமை..! பாலா தான் முதல் காரணம்..? பகீர் தகவல்கள்..!

விஷாலின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக விஷாலுடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. இதுக்கு பலர் இங்க காரணமா இருந்திருக்காங்க. விஷாலுக்கு யாரால் பாதிப்பு..? விஷாலால் யாருக்கும் பாதிப்பு..? அப்படின்னு பேச ஆரம்பிச்சா அது ரொம்ப பெரிய விவாதம் ஆகிடும்.

விஷனோட இந்த நிலைமைக்கு காரணம் டைரக்டர் பாலா தான். அவன் இவன் படத்துல மாறுகண் வேணும் அப்படிங்குறதுக்காக ஒரு பக்கம் கண்ணை இழுத்து சிகிச்சை பண்ணிட்டாங்க. இதுக்கு மருத்துவ ரீதியா பல பெயர்கள் சொல்றாங்க. விஷால் கண்ணு அப்படி வச்சுட்டு நடிக்கிறாரோ அப்படின்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க.

ஆனால், மருத்துவ முறையில் கண் அவருக்கு அப்படி மாற்றி அமைக்கப்பட்டு இருக்கு. டப்பிங் பேப்பர் கையில் எடுத்தாலே விஷால் ஓட கண் தானாகவே மாறிடும் அப்படின்னு டைரக்டர் பாலா ஒரு பேட்டில சொல்லி இருக்காரு.

இப்படி விஷாலுக்கு ஒரு கண்களை மாத்தினால் தான் அவருக்கு தீராத ஒற்றைத் தலைவலியை உண்டு பண்ணிருச்சு. இந்த வலியை போக்க விஷால் எடுத்துக்கொண்ட மருந்துகள் அவருக்கு தீவிரமான பக்க விளைவை உண்டு பண்ணிடுச்சு..

அடுத்ததாக நந்தா, ரமணா அப்படின்னு அவருடைய நெருக்கமான நண்பர்களும் விஷாலோட இந்த நிலைமைக்கு இரண்டாவது காரணமா இருக்காங்க. நடிகர் சங்கத்தில் பதவியை பிடிக்கணும்ன்னு, சரத்குமாரை தோற்கடிக்க வேண்டும்ன்னும் விஷால் கடுமையா உழைச்சாரு.. விஷால் சின்ன பையானா இருந்தப்போ விஷாலின் அப்பா தாயரிப்புல சரத்குமார் சில படங்களில் நடிச்சிருக்காரு.. அப்போ தன்னோட அப்பாவுக்கு, சரத்குமாருக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்துல மிகவும் மனம் நொந்து போயிருக்காரு விஷால்..

இதனால், நடிகர் சங்கம் தேர்தல்ல சரத்குமாரை எப்படியாவது தோற்கடிக்கணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தாரு. அப்போ ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமும் விஷால் பக்கம் தான் நின்னாங்க.

அந்த நேரத்துல விஷால் கிட்ட வந்து சேர்ந்தவங்க தான் நந்தாவும், ரமணாவும் இவங்க ரெண்டு பேருமே விஷாலை சுத்தி ஒரு வேலியை அமைசிட்டாங்க. நெருக்கமான நண்பர்களை கூட விஷால் கிட்ட இவங்க நெருங்க விடல.

இதனால நல்ல முடிவுகளை விஷால் எடுக்க முடியாமல் போயிடுச்சு. அப்புறம், நந்தாவும், ரமணாவும் சேர்ந்து விஷாலை வச்சி ஒரு படமும் பண்ணாங்க. அந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் விஷாலுக்கு மனவேதனையை கொடுத்துருச்சு.

தயாரிப்பாளர் சங்கத்துல தலைவராகிட்டு வரக்கூடிய பிரச்சனைகளை சரியா டீல் பண்ண முடியாம திணறுனாரு விஷால்.. இதனால், தயாரிப்பாளர்கள் யாருமே தயாரிப்பாளர் சங்கம் பக்கமே போறது இல்ல.. எல்லா பிரச்சனையையும் நேரடியா கோர்ட்க்கு கொண்டு போயிடுறாங்க..

இப்படி தயாரிப்பாளர்கள் கூட ஏற்பட்ட முரண்பாட்டால விஷால் படங்களுக்கு யாருமே பைனான்ஸ் செய்யவும் முன் வரல. இப்படி பல சிக்கல்களை அவராகவும் தேடிக்கிட்டாரு.

இது எல்லாத்துக்கும் மேல நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இதுல தினம் தினம் கட்ட பஞ்சாயத்து சூழ்நிலை கடுமையான மன உளைச்சல்.. டென்ஷன கொடுத்து அவருடைய உடல்நிலை பாதிச்சிருக்கு.

இந்த இடத்தில் மிஷ்கினையும் நம்ம சொல்ல வேண்டியிருக்கு.. துப்பறிவாளன் 2 படத்தில் ஏற்பட்ட சண்டை.. நஷ்டம்.. இதுவும் விஷாலுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்ன சொல்லலாம்.

மேடையிலேயே மிஷ்கின், விஷால் ரெண்டு பேரும் பகிரங்கமா மாறி மாறி திட்டிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியாம விஷால் கையில் எடுத்த சில விஷயங்கள் தான் அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கு.. அந்த அளவுக்கு அவருடைய உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு.. எப்படி கம்பீரமாக இருந்த ஒரு நடிகன்.. இப்படி ஆயிட்டாரு.. அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு அப்படின்னு சொல்லி இருக்கார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.

Summary in English : In a recent chat, a senior journalist dropped some serious insights about actor Vishal’s health struggles, pointing the finger at director Bala as the main culprit. According to him, Bala’s intense work style and the pressure of their collaborations have taken quite a toll on Vishal’s well-being.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version