விஷால் உடல் நிலை.. குஷ்பூ செய்த இந்த வேலை தான் காரணம்.. விஷால் நண்பர் கூறிய அதிர வைக்கும் தகவல்..!

நடிகர் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன..? இப்போது இந்த விவகாரம் வெளியே வருவதற்கு என்ன காரணம்..? என்று தகவல்களை அவருடைய நண்பர் ஒருவர் தனியார் சேனலுக்கு அழித்த பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகர் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் அவன் இவன் திரைப்படத்தில் அவர் மாறுகண் வைத்து நடித்தது என்று கூறுகிறார்கள். அது ஒரு தொடக்கப் புள்ளியாக நான் கூறுவேன்.

ஆனால், விஷாலின் முதுகில் குத்தி படுகுழியில் தள்ளியது அவருடைய நண்பர்களான இரண்டு நடிகர்கள் மட்டும்தான். அவர்கள் பணம் போட்டு தயாரித்த படத்தில் சம்பளம் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார் விஷால்.

ஆனால், அவர்கள் விஷாலிடம் ஒரு பெரிய தொகையை ஏமாற்றி சென்று விட்டனர். கணக்கு பார்க்கும் வரை விஷால் உடன் ஒட்டுண்ணிகளாக ஒட்டிக்கொண்டு இருந்த அந்த இருவரும்  நடிகர் விஷால் கணக்கு பார்த்து ஒரு மிகப்பெரிய தொகை காணாமல் போனதை கண்டுபிடித்த போது ஆள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட காணாமல் போய்விட்டார்கள்.

விஷால் இது குறித்து யாரிடம் சென்று புகார் செய்ய முடியும்..? யாரிடம் சென்று முறையிட முடியும்..? கூட இருந்தவர்களே இப்படி என்னை முதுகில் குத்து விட்டார்களே என மனுஷன் நொந்து போய்விட்டார்.

தன்னுடைய உடல் நலனில் விஷால் வைத்துள்ள அக்கறை போல வேறு எவரும் வைத்திருக்க முடியாது. அப்படி மரம் போல இருந்த மனுஷனை ரத்தமும் சதையுமாக ஒட்டுண்ணி போல பழகி நாசம் செய்து விட்டார்கள்.

அந்த இரண்டு நண்பர்கள் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்களை நான் விடவே மாட்டேன். விஷால் அனுமதி இல்லாமல் நான் இதைப் பற்றி வெளியே பேச விரும்பவில்லை.

அவர்களுடைய இருவருடைய முகத்திரையும் கிழிக்காமல் நான் விடமாட்டேன் என பேசி இருக்கிறார் விஷாலுடைய நண்பர். தொடர்ந்து பேசிய அவர்.. இந்த நேரத்தில் நான் குஷ்பூ மேடமுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஏனென்றால் விஷாலின் உடல் நிலையை பார்த்து அவரை மீண்டும் பொதுவெளிக்கு கொண்டு வர வேண்டும் அவருடைய நிலையை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அவரை குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மதகஜராஜா படத்தை மிகப்பெரிய சிரமத்துக்கு மத்தியில் இன்று திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு அவர்கல் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை எனக்கு தெரியும். அதற்கேற்ற பலனை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

அதே நேரம் அந்த பட வெளியீட்டு விழாவுக்கு விஷால் வரவே மாட்டேன் என்று இருந்தார். அந்த நேரத்தில், விஷாலை வற்புறுத்தி நீ ஏன் இப்படி இருக்குற.. நீ யாருன்னு உனக்கு மறந்து போயிடுச்சா.. நீ விஷால்டா.. உனக்காக இங்கே எத்தனை பேர் இருக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அவருடைய மனதை மாற்றி அந்த விழாவுக்கு அழைத்து வந்தார்.

இப்போதுதான் அவருடைய உடல் நிலை என்ன.. எதனால் இப்படி ஆனார்.. என்ற விஷயங்கள் வெளியே வர தொடங்கி இருக்கிறது. இல்லையென்றால் விஷால் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் இருப்பார்.

குஷ்பு மேடம் விஷாலை உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். முறையான சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். கண்டிப்பாக குஷ்பு மேடம் விஷாலின் மீண்டும் அந்த பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவார்.

அவர் உடல்நலம் பெறுவதில் தான் எங்களுடைய முழு கவனமும் தற்போது இருக்கிறது. ஆனால், விரைவில் அந்த இரண்டு பேரும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷாலின் நண்பர்.

Summary in English : Recently, some gossip has been making the rounds about actor Vishal. According to a close friend of his, it seems that two of Vishal’s so-called buddies have betrayed him, and this betrayal has taken a toll on his health. It’s tough to hear that someone you trust can turn out to be not what they seem. Friends are supposed to lift you up, but in this case, it looks like they’ve done the opposite.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam