In a recent interview, the wife of actor Vivek shared her thoughts on the tragic passing of her husband.
தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தன்னுடைய 59 வயதில் மரணமடைந்தார்.
இவர் மரணம் அடைந்தபோது பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது தான் காரணம் என்று கூறினார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையை வெடிக்க செய்தது.
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவருடைய மனைவி அளித்துள்ள பேட்டியில் கொரோனா சமயத்தில் மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள்.
புதிது புதிதாக தடுப்பூசி வருகிறது. அதை போடலாமா..? வேண்டாமா..? என்று குழம்பி இருந்தார்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். விவேக் சாருக்கும் அந்த குழப்பம் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அவர் நிறைய பேரிடம் தடுப்பூசி போடலாமா..? வேண்டாமா..? என்பது குறித்து ஆலோசனை செய்தார். அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டு ஒன்றுக்கு சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
எனவே விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்ற விதி இருந்தது. தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவரால் விமானத்தில் பயணிக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.
எனவே தடுப்பூசி போட இரண்டு முறை சென்றோம். அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதற்கு பிறகு மூன்றாவது முறையாக தான் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அப்போது ஊடகத்தினரை அழைத்து அவர்கள் முன்பு தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஏனென்றால், நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் என்னை நம்பி பலரும் பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். மக்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகம் நீங்கும் என்று அப்படி செய்தார்.
ஆனால், அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத விதமாக இறந்து விட்டார். அவர் இறந்ததற்கு காரணம் என்னவென்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. அவர் தனது உடலை அப்படி பார்த்துக் கொள்வார்.
அவருடைய உணவு பழக்கங்களை எல்லாம் பார்த்தால் அந்த அளவுக்கு இருக்கும். தன்னுடைய உடல் நலத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்னுடைய கணவர் விவேக்.
வேறு யாராலும் அவர் சாப்பிடக்கூடிய உணவுப் போல தன்னுடைய உடல் மேல் கவனம் செலுத்துவது போல செலுத்த முடியாது. லாக் டவுன் அமலில் இருந்த போது அவர் எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் நகரில் வாக்கிங் செல்ல தவறியது கிடையாது.
வீட்டு மாடியில் உடற்பயிற்சி கூடம் இருக்கிறது. அதிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். மட்டுமல்லாமல் தவறாமல் யோகாவும் செய்யக்கூடிய ஒருவர். இப்படி உடலை பார்த்து பார்த்து வளர்த்தவர் எப்படி ஒரு இறப்பை சந்தித்து இருக்க முடியும் என்ற குழப்பம் எங்களுக்குள் இப்போதும் இருக்கிறது.
அவர் இறந்ததை தொடர்ந்து பலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள பயந்தார்கள். ஆனால், காலம் செல்ல செல்ல எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாருமே மரணிக்கவில்லையே. எனவே விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம் என்று எங்களால் சொல்ல முடியவில்லை என்று கூறி இருக்கிறார் விவேக்கின் மனைவி.
Summary in English : In a recent interview, Vivek’s wife opened up about the tragic loss of her husband, expressing her uncertainty regarding the role of the corona vaccine in his passing. She shared that while many have speculated about a connection, she feels it’s essential to approach such claims with caution.