“இன்னொரு கல்யாணம் பண்ணு.. எனக்கு அது வேணும்..” மகன் குறித்து VJ மகாலட்சுமி eXclusive..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியும் சீரியல் நடிகையுமான VJ மகாலட்சுமி தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

vj mahalakshmi in black saree wearing black and gray bangles

அதில் பேசியதாவது நான் என் கணவரை விவாகரத்து செய்த பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்தபோது நான் திருமணம் செய்யக்கூடிய நபர் எனக்கு மட்டும் பிடித்தவராக இல்லாமல் என்னுடைய மகனுக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஒரு கட்டத்தில் நீ இன்னொரு திருமணம் செய்து கொள். எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று என்னுடைய மகனே கேட்க தொடங்கினான். அது எனக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் கூடுதல் பலமாகவும் இருந்தது.

vj mahalakshmi in dark black tops gray jacket selfie

அந்த சமயத்தில் தான் நான் தயாரிப்பாளர் ரவீந்தர்-ஐ பார்த்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். ரவீந்தருக்கும் என்னுடைய மகனுக்கும் இருக்கக்கூடிய உறவு அலாதியானது இருவரும் நண்பர்கள் போல பழகுவார்கள்.

vj mahalakshmi in green saree pink blouse standing in steps

இன்னும் சொல்லப்போனால் நான் ரவீந்தரை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு உந்துதலாக இருந்ததே என்னுடைய மகன்தான். குறிப்பாக சாப்பிடக்கூடிய விஷயத்தில் என்னுடைய மகனும் ரவீந்தரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் நான் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறுகிறார்கள்.

vj mahalakshmi in black saree wearing black and gray bangles

ஒருவேளை ரவீந்தர் தயாரிப்பாளராக இல்லாமல் இருந்திருந்தாலும் நான் திருமணம் செய்து கொண்டிருப்பேன். அல்லது, வேறு யாரும் ரவீந்தர் போல என்னிடம் பாசமாக அன்பாக பேசி இருந்தால் நான் அவர்களை திருமணம் செய்து கொண்டிருந்திருப்பேன் எனவும் பதிவு செய்து இருக்கிறார்கள் VJ மகாலட்சுமி இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam