ஒருத்தரோட உடம்புக்காக அவங்கள பிடிக்கும்னா.. விரசமாகப் பேசிய விஜே பிரியங்கா!! ஷாக்கில் ரசிகர்கள்..

விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கும் விஜே பிரியங்கா சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் பெற்றிருப்பவர்.

இந்நிலையில் இவர் ஊ சொல்றியா ஊகும் சொல்றியா, கலக்கப்போவது யாரு. சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக், ஒன்லி பெல்லி, சூரிய வணக்கம், அழகிய பெண்ணே, ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

ஒருத்தரோட உடம்புக்காக அவங்கள பிடிக்கும்னா..

கர்நாடக மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தனது பணியை பக்காவாக செய்து வருவதோடு பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அண்மையில் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 5 கலந்து கொண்ட இவருக்கும் விஜே மணிமேகலைக்கும் இடையே வாக்குவாதம் முற்றி டாமினேஷன் செய்து அவரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விடாமல் பல்வேறு வகைகளில் டார்ச்சர் செய்ததாக விஷயங்கள் வெளி வந்து இணையத்தில் பேசும் பொருள் ஆனது.

இதை அடுத்து அநேக ஊடகங்களில் இருவர் பற்றியும் அதிக அளவு விஷயங்கள் வெளி வந்து இணையமே திணற கூடிய வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு விமர்சனங்களும் எழுந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் விஜே பிரியங்கா கலாட்டா தமிழில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய பேச்சு தற்போது பரபரப்பாக இணையம் முழுவதும் பரவி வருகிறது.

இதற்கு காரணம் இந்த பேட்டியில் யாராவது ஒருவர் ஒருவரது உடலை பார்த்து அந்த உடலுக்காக அவர்களைப் பிடிக்கும் என்று சொல்லுவது பற்றி பேசிய போது அது அவர்களுடைய சாய்ஸ் அதற்கு நாம் ஏதும் சொல்ல முடியாது என்ற தனது நிலையை பதிவு செய்தார்.

விரசமாகப் பேசிய விஜே பிரியங்கா..

இப்படி உடலுக்காக விரும்புபவர்களை பற்றி விரசமாக பேசிய அவர் தொடர்ந்து சொன்ன விஷயங்கள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால் உங்களை நீங்கள் முதலில் லவ் பண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும் அவர் தன்னை எப்போதுமே லுக் கான்சியஸ் ஆக நினைக்கக்கூடிய ஆள் கிடையாது என்பதை பகிர்ந்ததோடு அதற்கு உதாரணமாக தான் பேசும் போது மேக்கப் கலைவதால் அது பற்றி கவலை கொள்ளவோ அல்லது மீண்டும் மேக்கப் போட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்படாது என்பதை கூறினார்.

எனவே என்னுடைய புறத்தோற்றம் எப்படி உள்ளது என்பதை பற்றி நான் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது. ஆனால் உங்கள் புறத்தோற்றத்தை விட உங்களுடைய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை குறிப்பாக சொன்னார்.

உங்கள் உருவம் எப்படி இருந்தாலும் நீங்கள் உங்களை விரும்ப வேண்டும்‌ பிறகு உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தக்கூடிய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

ஷாக்கில் ரசிகர்கள்..

அப்படி என்னை பார்த்து இந்த விஷயத்திற்காக கலாய்த்து இருந்தார்கள் என்றால் அவர்களைப் பார்த்து போடா டேய் என்று தான் சொல்லுவேன். அதுமட்டுமல்லாமல் இன்னும் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் போடா டேஷ் என்று சொல்லுவேன் என கூறி இருக்கிறார்.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவரது பேச்சை பார்த்து ஆச்சரியம் அடைந்ததோடு போடா டேஷ் என்று சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam