ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா யார் தெரியுமா..?

சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆன சீரியல் தான் ரோஜா. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 1316 எபிசோடுகள் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடுச்சு. இந்த சீரியலில் ரோஜா என்ற டைட்டில் கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை பிரியங்கா.

இவரைப் பற்றி பலரும் அறியாத சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் இருக்கும் ஹைதராபாத்தில் தான்.

தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்புகளை ஹைதராபாத்திலேயே படித்து முடித்து இருக்கிறார் பிரியங்கா. இவர் சிறு வயதிலிருந்து முறையாக நடனம் கற்று இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது தெலுங்கு மொழியில் வெளியான அண்டாரி பந்துவையா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை பத்மபிரியாவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் திவ்யாஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைனிங் (Diploma in Interior Designing)என்ற படிப்பை படித்து முடித்து இருக்கிறார்.

வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள், இவைகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்வதில் பிரியங்கா கைதேர்ந்தவராக இருக்கிறார்.

அதன் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால், கொடுமை என்னவென்றால்…? இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஹீரோயினுக்கு தங்கையாகவோ.. ஹீரோயினுக்கு தோழியாகவோ.. போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைத்தன.

சீரியல்களைப் பொறுத்தவரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் இவரை அடையாளம் காட்டியது ரோஜா சீரியல் தான்.

இவருக்கு நன்றாக நடனமாட தெரியும் என்பதால் சீரியலின் படப்பிடிப்பு இடைவேளையின் போது சக நடிகைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அவர்களுடன் ரிலீஸ் வீடியோ எடுப்பதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.

சீரியலில் சக நடிகைகளுடன் நட்பாக பழகியதன் காரணமாக இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் நடிகர் ராகாவா லாரன்ஸ் உடைய நடனத்திருக்கு மிகப்பெரிய ரசிகையான இவர் காஞ்சனா 3 படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய நடனத் திறமையை லாரன்ஸ் மாஸ்டரிடம் வெளிப்படுத்தி அவருடைய பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ் சீரியலில் நடிக்கும் பொழுது நீளமான வசனங்களை தொடர்ச்சியாக பேசுவதற்கு சிரமப்பட்டு இருக்கிறார். ஏனென்றால், இவருக்கு தமிழ் சரியாக தெரியாது.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல தமிழ் மொழியை கற்றுக் கொண்டு பெரிய வசனமாக இருந்தாலும் அசால்டாக பேசி அசத்தியுள்ளார் பிரியங்கா. சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய, இந்த காதலுக்கு தனது வீட்டில் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் வெளிநாட்டிற்கு தன்னுடைய காதலனுடன் சென்று அங்கே எளிமையாக முறையில் தன்னுடைய நண்பர்கள் சிலர் முன்னிலையில் ஒரு கோயிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, ரோஜா சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பு குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam