உருவ கேலிகளுக்கு மத்தியில் தானே திரை உலகில் நிலை நிறுத்தி பல கோடி சொத்துக்கள் சேர்த்திருக்கும். யோகி பாபுவின் சொத்து மதிப்பு என்ன என்பது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
திரை உலகம் என்றாலே அழகோடு கலரும் இருந்தால் ஒர்க் அவுட் ஆகும். அதிலும் அப்படி இருந்தாலும் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் மட்டுமே அவர்கள் மிகச்சிறந்த நடிகர்களாகவும் நடிகைகளாகவும் திரை உலகை ஜொலிக்க முடியும்.
அந்த வரிசையில் பல திறமை இருந்தும் அழகில்லாமல் திரை உலகில் ஜொலிக்க முடியாமல் இருக்கிறார்கள். சிலரோ அழகை மட்டும் வைத்துக்கொண்டு அதிர்ஷ்டம் இல்லாமல் திரையுலகை விட்டு ஓடிப்போன கதைகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த மூஞ்சியா? யோசித்தவர்கள் மத்தியில் ..
எனினும் யோகி பாபுவை பொருத்த வரை ஆரம்ப காலத்தில் இந்த மூஞ்சிக்கு யார் வாய்ப்பு கொடுப்பாங்க என்று கேட்டவர்கள் மத்தியில் பல கோடி சொத்துக்கு அதிபராகி மக்கள் மத்தியில் ஒரு மிகச்சிறந்த காமெடியனாகவும், நடிகராகவும் வளர்ந்து இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா படத்தில் 30 நிமிட காட்சிகளில் காமெடி செய்திருந்தாலும் அந்த காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் பலரும் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர் ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த வருவதோடு குழந்தைகள் முன்னேற்ற கழகம், சுமோ, மலை, ஜகஜல கில்லாடி, கோல்மால் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்த படங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு வெளிவரக்கூடிய நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர் காட்டில் அடை மழை என்று சொல்லக்கூடிய வகையில் அவரது கைவசத்தில் ஏகப்பட்ட படங்கள் உள்ளது.
அந்த வகையில் சலூன், வீரப்பனின் கஜானா, மண்ணாங்கட்டி, மெடிக்கல் மிராக்கிள், சைத்தான் காபச்சா, பெரியாண்டவர் போன்ற படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுபோல ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வரும் இவர் இது குறித்த அறிவிப்பை ரஜினியின் பிறந்த நாளில் வெளியிடுவார்கள் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து யோகி பாபு நடித்து வருகிறார்.
சாதித்த யோகி பாபுவின் சொத்து மதிப்பு..
அந்த வகையில் யோகி பாபு ஒரு படத்தை நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தற்போது சிங்கார சென்னையில் பிரமாண்டமான வீட்டைக் கட்டி வரும் யோகி பாபு தமிழில் முன்னணி காமெடியனாகவும் நடிகராகவும் வலம் வருவதோடு இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 85 கோடி இருக்கலாம் என்ற தகவல் வெளி வந்து அனைவரது வாயை பிளக்க வைத்து விட்டது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த மூஞ்சியா என்று கேட்டவர்களின் மத்தியில் தனது திறமையை வைத்து திரை உலகில் எந்த அளவு முன்னேறி இருக்கும் இவரை இன்ஸ்பிரேஷனாக அனைவரும் எடுத்துக் கொண்டால் சிறப்பாக வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்று சொல்லி வருகிறார்கள்.
Summary in English: Yogi Babu is one of those incredible stories that remind us to never underestimate someone based on appearances or how others perceive them. He’s a talented actor who faced a ton of mockery early in his career, but instead of letting it get him down, he turned that negativity into fuel for his fire.