irfan october october

சிக்கலில் நடந்த பிரசவம்… இந்த வாட்டி இர்ஃபான் தப்பிக்க முடியாது… தீவிரமாக களத்தில் இறங்கிய போலீஸ்.!

தமிழில் உள்ள யூ ட்யூபர்களிலேயே தொடர்ந்து அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் யூட்யூபராக இர்ஃபான் இருந்து வருகிறா.ர் இர்ஃபான் என்பவர் தமிழ்நாட்டில் youtube வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் தொடர்ந்து உணவு குறித்த விமர்சனங்களை வெளியிட்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஆவார்.

ஆரம்பத்தில் தொடர்ந்து உணவுகள் குறித்து வீடியோ போட்டு வந்த இர்ஃபான் தொடர்ந்து மக்களை கவர்வதற்காக வேறு வகையான வீடியோக்களையும் போட துவங்கினார் முக்கியமாக தனது குடும்ப வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை அதிகமாக பகிரத் துவங்கினார்.

சிக்கலில் நடந்த பிரசவம்

திருமணமான பிறகு தொடர்ந்து தனது குழந்தைக்கு பெயர் வைப்பது வரை அனைத்தையும் வீடியோவாக செய்து போட்டு வந்தார். அதே சமயம் தொடர்ந்து அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு பிரபலமாகவும் இர்ஃபான் இருந்து வந்தார்.

irfan october october

ஆரம்பத்தில் அவருடைய கார் ஒன்று விபத்துக்கு உள்ளானது அதிக பிரபலமாகி வந்தது. அதை இர்ஃபான் தான் செய்தார் என்று அனைத்து பக்கங்களிலும் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் கடைசியில் அதை இர்ஃபான் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது.

இர்ஃபான் தப்பிக்க முடியாது

அதற்குப் பிறகு தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வெளிநாட்டுக்கு சென்று கண்டறிந்து வந்து அதனை ஒரு வீடியோவாக போட்டார்.

அதுவும் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால் அதிலும் பெரிதாக தண்டனை பெறாமல் தப்பிவிட்டார் இர்ஃபான். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அதை ஒரு வீடியோவாக இவர் வெளியிட்டிருக்கிறார்.

களத்தில் இறங்கிய போலீஸ்

தற்சமயம் இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனெனில் மருத்துவத் துறையின் சட்டப்படி தொப்புள் கொடியை இப்படி வெட்டுவதை வீடியோவாக எடுத்து பதிவிட கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்யக்கூடிய இடத்திற்குள் இந்த மாதிரி கேமரா எடுத்துச் சென்று வீடியோ எடுப்பதற்கெல்லாம் அனுமதியே கிடையாது என்று கூறப்படுகிறது.

irfan vijay october october

ஒரு தனியார் மருத்துவமனையில்தான் இந்த செயல் நடந்திருக்கிறது. எனவே அந்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில் கண்டிப்பாக இர்ஃபானுக்கு தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மருத்துவர்கள் மட்டுமே குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு கையாள்வதற்கு தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் இர்ஃபான் அதை எப்படி செய்யலாம் என்று கூறி வருகின்றனர் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள், எனவே இதற்கு அவருக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அப்படி ஒரு வேலை தண்டனை அவருக்கு வழங்கப்படவில்லை என்றால் இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த நிறைய யூடியூபர்கள் அவர்கள் இதை செய்ய வாய்ப்பு உள்ளது எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள்.

--- Advertisement ---

Check Also

karthi october october

கோடி ரூபா குடுத்தாலும் “அந்த சீனல” நடிக்க மாட்டேன்.. கார்த்தி சொன்னதை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!

வாரிசு நடிகரான நடிகர் கார்த்தி சிவகுமார் 1977 ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்தவர். இவர் தற்போது தமிழ் …