நான் இஸ்லாம் மதத்திற்கு மாறுனப்போ.. அப்பா இதை பண்ணல.. யுவன் ஷங்கர் ராஜா பரபரப்பு தகவல்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜயா சந்திரன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் யுவன் சங்கர் ராஜா.

அதனை தொடர்ந்து ஷில்பா மோகன் என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள் காரணமாக 2014 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது மனைவி ஷில்பா மோகனையும் விவாகரத்து செய்தார்.

மூன்றாவதாக தன்னுடைய 2015 ஆம் ஆண்டு Zafroon Nisha என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் தன்னை இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக் கொண்டார் யுவன் சங்கர் ராஜா.

இது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும், இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த போது தன்னுடைய தந்தை இளையராஜா அந்த திருமணத்திற்கு வராதது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது அதற்கான காரணத்தை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பாடல்கள் இசை மூலம் ரசிகர்களை வென்றவர் என்றாலும் அவர் ஒரு முழுமையான இந்துத்துவ ஆன்மீகவாதி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னுடைய பாடலில் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கிறது என்றால் அதற்கு இந்துதத்துவ ஆன்மீகம் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறது என்பதை பல்வேறு இடங்களில் இளையராஜா பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில், இவருடைய மகன் மதம் மாறியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது என்றாலும் தற்போது யுவன் சங்கர் ராஜாவிற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிய போது என்னுடைய தந்தை கூறிய விஷயம் என்னவென்றால்.. தினமும் 5 வேளை இறைவனை தொழுவதற்கு தயாராக இருக்கக்கூடிய ஒருவனை நான் எதற்காக தடுக்க வேண்டும் என்றுதான் கூறினார்.

என்னுடைய திருமணம் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென நடைபெற்ற திருமணம். ஒருவேளை நான் அந்த திருமணத்திற்கு வந்தால் அங்கே இருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது உள்ளிட்ட சில காரணங்களால் தான் என்னுடைய திருமணத்திற்கு தந்தை வரவில்லையே தவிர நான் மதம் மாறிவிட்டேன் என்ற காரணத்திற்காக என் திருமணத்தை புறக்கணிக்கவில்லை என்று பேசி இருக்கிறார் யுவன்.

இவருடைய இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது இது விளக்கத்தை கொடுப்பாரா..? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version