அப்பாவையே எதிர்த்து யுவன் சங்கர் ராஜா செய்த அந்த காரியம்… தங்கமான மனசுக்காரரா இருப்பார் போல..!

சினிமாவில் மாற்று இசையை கொண்டு வந்த பிரபலமான இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் யுவன் சங்கர் ராஜா. யுவன் சங்கர் ராஜா பெரும்பாலும் காதல் பாடல்களுக்காக அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார்.

ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஏதோ ஒரு இசை தொடர்பாக அதிக பிரபலமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு இசையமைப்பாளர் தேவா கானா பாடல்களுக்கு புகழ் பெற்றவர் ஆக இருக்கிறார். அதேபோல யுவன் சங்கர் ராஜா படங்களில் போடும் பின்னணி இசை மற்றும் காதல் பாடல்களுக்கு பிரபலமானவர்.

அப்பாவையே எதிர்த்த மகன்:

அவருடைய பாடல்களில் அதிக ஹிட் கொடுத்த பாடல்கள் காதல் பாடல்களாக தான் இருக்கும். இருந்தாலும் கூட பெரிய நடிகர்களின் படங்களுக்கு யுவன் இசையமைக்கும் பொழுது அதில் சில தடுமாற்றம் இருப்பதை பார்க்க முடிகிறது.

உதாரணத்திற்கு கோட் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பொழுது அது அவருடைய முந்தைய இசை அளவிற்க்கு பிரமாதமாக இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இளையராஜாவின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட அதற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

யுவன் சங்கர் ராஜா செய்த அந்த காரியம்

இந்த நிலையில் தனது தந்தையுடன் சண்டை போட்டு ஒரு நபருக்கு அவர் வாய்ப்பை கொடுத்த விஷயத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது வேறு யாருமில்லை நடிகர் பிரேம்ஜி தான். நடிகர் பிரேம்ஜி ஆரம்பத்தில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவும் பிரேம்ஜியும் சிறுவயதிலிருந்த நண்பர்களாக பழகி வந்தனர் ஆனால் கங்கை அமரனுக்கும் இளையராஜாவிற்கும் இடையே சண்டை இருந்து வந்ததால் இளையராஜா பிரேம்ஜியுடன் அந்த சமயத்தில் பேசாமல் இருந்து வந்தார்.

தங்கமான மனசுக்காரரா இருப்பார் போல

இந்த நிலையில் தன்னுடன் பிரேம் ஜீயும் வேலை பார்க்கட்டும் என்று இளையராஜாவிடம் அதற்கு அனுமதி கேட்டு இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா ஆனால் இளையராஜா ஒப்புக்கொள்ளவே இல்லை. இருந்தாலும் அதை கண்டு கொள்ளாத யுவன் சங்கர் ராஜா பிரேம்ஜியை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இந்த விஷயத்தை யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam