ரெட் லைட் ஏரியா..? ஒரு மணி நேரத்துக்கு என்ன ரேட்..? என் கூட படுப்பியா..? அர்ச்சனா மகள் கொடுத்த பதில்..! 

Anchor Archana‘s daughter Zaara took to social media and totally owned the haters with her epic comebacks! After posting some fun photos, she was met with a wave of not-so-nice comments.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவின் மகள் சாராவும் சின்னத்திரை வட்டாரங்களில் பிரபலமான பலவராக இருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில், சமீபத்தில் இரவு நேரத்தில் சாலையோரம் கருப்பு நிற ட்ரான்ஸ்பரெண்ட் புடவை அணிந்து படி கையில் சிகப்பு நிற ஹேண்ட் பேக் மட்டியபடி இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

ஆனால், இந்த புகைப்படங்களுக்கு மோசமான கருத்துக்களை சில நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கிறார்கள். இதனை கவனித்த அர்ச்சனாவின் மகள் சாரா அதற்கு உண்டான பதிலை கொடுத்திருக்கிறார்.

Achana Zaara mirror selfie

அவர் கூறியதாவது, ரெட் லைட் ஏரியா.. ஒரு மணி நேரத்திற்கு என்ன ரேட்..? பைபாஸ் ரோட்டை நினைவுபடுத்துகிறது..? என் கூட படுப்பியா..? இன்னும் எவ்வளவோ கமெண்ட்கள் அதனை நான் பேச விரும்பவில்லை.

என்னுடைய சமீபத்திய பதிவுகளுக்கு எனக்கு கிடைத்த கமெண்ட்கள் இது. இதயம் நொறுங்கியது போன்ற உணர்வு. மிகவும் சோகமானது. ஜீரணித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.

ஒரு பெண்ணை எவ்வளவு எளிமையாக ஒரு பொருளாக மாற்றி விடுகிறார்கள். நான் வெளியிட்டு இருந்த அந்த புகைப்படங்களை படம் பிடித்தது என்னுடைய தந்தை.

Achana Zaara stadning in road red hand bag black saree

என்னுடைய தந்தை பணியாற்றும் இடத்தில் நடந்த இரவு நேர விருந்திற்காக நாங்கள் சென்றிருந்தோம். செல்லும் வழியில் அந்த சாலையில் அந்த புகைப்படத்தை எடுத்தோம்.

இதனை நான் விவரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது வேதனையாக இருக்கிறது. ஆனாலும், இதனை நான் சொல்லியாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

ஒருவருடைய ஆடையை வைத்து களங்கப்படுத்த முயற்சி செய்கிறது இந்த சமூகம். கவர்ச்சியான ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களை ஒரு விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால் நான் புடவை அணிந்து கொண்டு அல்லவா புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன்.

Achana Zaara sun kissed

இதையும் தற்போது விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஒரு பெண் புடவை அணிந்திருக்கிறாள் அந்த புடவை மின்னும் வகையில் இருக்கிறது கையில் ஒரு ஹேண்ட் பேக் வைத்திருக்கிறாள்.. அவருடைய கூந்தலை முடியாமல் சாலையில் நின்று இருக்கிறாள் இது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக தெரிகிறதா..?

நான் எப்படி உடை உடுத்துகிறேன்.. நான் எப்படி என்னை காட்டிக் கொள்ள விரும்புகிறேன்.. அதை எப்படி என்னுடைய சமூக வலை பக்கங்களில் வெளியிடுகிறேன்.. இது எல்லாம் என்னை பொறுத்தது அது என்னுடைய சுதந்திரம் என்னை உண்மையாக நேசிக்கக் கூடியவர்கள் இது புரியும்.

Achana Zaara stadning in road red hand bag black saree

எனக்கு தொடர்ச்சியாக உண்மையான அன்பை கொடுத்து கொண்டு இருக்க கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். முகம் இல்லாத, வெட்கமில்லாத, ஜீரணிக்கவே முடியாத சில ஆசாமிகளின் இந்த கமெண்ட்டுகளை பார்க்கும் போது அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயம்.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது கட்டாயம்.. என பதிலடி கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Achana Zaara reply

Summary in English : Anchor Archana’s daughter, Zaara, recently took to social media and faced a wave of mixed reactions. But instead of letting the negativity get to her, she handled the bad comments like a pro! With her witty comebacks and confident responses, Zaara showed that she knows how to stand up for herself.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam