ரஜினிகாந்த் சிகிச்சை.. உடனடியாக நடந்த அந்த விஷயம்.. கண் விழித்ததும் கூறிய தகவல்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கூட ரஜினிக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை.

அதே சமயம் தொடர்ந்து வயதாகி வரும் காரணத்தினால் மற்ற நடிகர்களை போல ரஜினியால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது இருந்தாலும் கூட ரசிகர்களின் ஆசைக்காக தொடர்ந்து படங்களில் இவர் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் சிகிச்சை

இந்த நிலையில் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டு இருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று இரவு முதலே அவருக்கு வயிற்றுப் பகுதியிலும் மார்பிலும் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ரஜினிகாந்த்க்கு சில வருடங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது.

நடந்த அந்த விஷயம்

அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அதிலிருந்து உணவு விஷயங்களிலும் மற்ற விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்க்கு அவருடைய ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இருதய மருத்துவர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையை மேற்கொண்டார்.

கண் விழித்ததும் கூறிய தகவல்

காலை 11 மணியளவில் இந்த ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பிறகு கண் முழித்த ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் நல்ல விதமாக பேசினார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்னும் 24 மணி நேரங்கள் அவரை ஐசியூ வார்டில் வைத்திருந்து விட்டு பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள் என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இது ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது தொடர்ந்து சில காலம் ஓய்வுக்கு பிறகு தான் மீண்டும் அவர் படப்பிடிப்பை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam