அடையார் ஆனந்த பவனுக்கு பேர் வச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?.. இந்த அர்த்தம் யாருக்காச்சும் தெரியுமா?

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட தனக்கென தனிக்கடையை வைத்திருக்கும் ஒரு நிறுவனமாக அடையார் ஆனந்த பவன் இருந்து வருகிறது.

சாதாரணமாக சின்ன ஹோட்டலாக துவங்கி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறது அடையார் ஆனந்த பவன் 100க்கும் அதிகமான கிளைகளை கொண்டிருக்கும் அடையார் ஆனந்த பவன் குறித்து அதன் உரிமையாளர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

பேர் வச்சதுக்கு இதுதான் காரணம்

அதில் அவர் கூறும் பொழுது இந்த இந்த ஹோட்டலுக்கு அடையார் ஆனந்த பவன் என்று பெயர் வைப்பதற்கு முன்பு ஒரு கதை இருக்கிறது. முதலில் இந்த உணவகத்திற்கு ஸ்ரீ ஆனந்த பவன் என்றுதான் பெயர் வைப்பதாக முடிவு செய்து இருந்தோம்.

பிறகு நான்தான் எனது தந்தையிடம் சென்று இந்த உணவகத்தின் பெயரை அடையார் ஆனந்த பவன் என்று வைப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஸ்ரீ என்பது மிகவும் புனிதமான ஒரு எழுத்தாகும்.

உரிமையாளர் சொன்ன கதை:

அதை முதலில் வைத்து பெயர் வைக்கலாம் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் கூறும் பொழுது அடையாறில் ஒரு ஆலமரம் இருக்கிறது. அந்த ஆலமரத்திற்கு அழிவே கிடையாது. அதேபோல நமது உணவகத்திற்கும் அழிவே இருக்க கூடாது என்பதால் தான் அடையாறு ஆனந்த பவன் என்று வைப்போம் என்கிறேன். என்று கூறினேன்.

அந்த ஆலமரம் உண்மையில் சில வருடங்களுக்குப் பிறகு இறந்துவிட்டது ஆனால் அது விட்ட கிளைகளில் இருந்து புதிய மரம் மீண்டும் உருவானது அது எத்தனை கிளைகளை பூமியில் திரும்பத் திரும்ப விடுகிறதோ அதே போல நானும் அடையார் ஆனந்த பவனை துவங்கிய பிறகு எக்கச்சக்கமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam