திரை உலகமே தற்போது புரட்டிப் போடக் கூடிய வகையில் மலையாள திரை உலக பிரபலங்கள் மீது பாலியல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் இணையம் முழுவதும் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை அடுத்து ஹேமா கமிஷன் அமைத்து அது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட பட்டு வந்த நிலையில் தற்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மல்லுவுட் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.
பச்சையாக கேட்ட பிரபல நடிகர்..
இதனை அடுத்து திரையுலகில் நடிக்க வேண்டும் என்றால் காஸ்டிக் ஹவுச் என்ற பெயரில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்களை இச்சைக்கு இணங்க வேண்டும் என மலையாள திரை உலகில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பலர் இருப்பது அம்பலமாகியுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா முதல் தொடங்கி பல நடிகைகளின் பெயர்கள் இடம் பிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. ஏற்கனவே தமிழ் திரை உலகில் இது போன்ற மீடு புகார்களை பல நடிகைகள் கொடுத்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
மலையாள திரை உலகில் முக்கியஸ்தராக திகழும் சித்திக் தொடங்கி நடிகர் ஜெயசூர்யா, மணியன் பிள்ளை மலையாள இயக்குனர் ரஞ்சித் என பல பிரபலங்களின் மீது பகீர் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
2 எழுத்து நடிகை எடுத்த விபரீத முடிவு..
அந்த வகையில் தமிழ் நடிகரான ரியாஸ் கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் நடிகை மினுமுனி நடிகர் ஜெயசூர்யா, மணியன் பிள்ளை, இடைவேளை பாபு, சந்திரசேகர் ஆகியோர் தன்னை வார்த்தைகளாலும் பாலியல் ரீதிகளும் துன்பப்படுத்தியதாக பதிவுகளில் சொல்லி இருக்கிறார்.
மேலும் நடிகர் பாபுராஜ், இயக்குனர் துளசிதாஸ் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு மட்டுமல்லாமல் இவர்களால் தனக்கு பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
சிக்கும் இயக்குனர் ரஞ்சித்.. தமிழ் நடிகர்..
இதனால் தான் மலையாள திரை உலகை விட்டு விலகி சென்னைக்கு குடியேறி இருப்பதாக சொல்லி இருக்கும் இவரது கருத்து தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து நடிகர் பாபுராஜ் மற்றும் இயக்குனர் துளசிதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜஸ்டிஸ் ஹேமா கமிட்டியின் அறிக்கை படி குவியும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அமைத்திருக்கும் குழுவின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக கேரள மக்கள் மட்டுமல்லாமல் நாடே காத்துள்ளது என்று சொல்லலாம்.