வேற்றுக்கிரக வாசிகள் பற்றி அண்மை நாட்களாக அதிகளவு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை எடுத்து அண்மையில் ஓர் உயர் பதவியில் இருந்த அதிகாரி கூட சென்னையில் ஏலியன்களை பார்த்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை அடுத்து பறக்கும் தட்டு பற்றியும் அதை ஓட்டி வரும் ஏலியன்கள் பற்றியும் பரபரப்பாக பல்வேறு கதைகள் வெளி வந்த நிலையில் அவை இருப்பது உண்மைதானா? என்ற கேள்விக்கு இது வரை தெளிவான பதில் ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை.
ஏலியன் சித்தர்..
இந்நிலையில் ஏலியன் சித்தர் என்று சொல்லப்படக் கூடிய ஒருவர் ஏலியன்கள் இனி மேல் அதிகளவு பூமியில் நோக்கி வரும் என்றும் இவை ஆத்ம ரூபத்தில் கண்டிப்பாக இருக்கும் என்றும் எனவே இனியாவது நீங்கள் ஏலியனை நம்ப வேண்டும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி இருக்கிறார்.
ஏற்கனவே இந்த ஏலியன்கள் அணு ஆயுதங்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியை நோக்கி மட்டும் வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளி வந்த நிலையில் இவை மனித இனத்தோடு நட்பு கொள்ள முயல்கிறதா? என்பதை கண்டறிய பல்வேறு ஆய்வுகள் பல நாடுகளில் நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்த ஏலியனுக்காக கோயில் கட்டி இருக்கக்கூடிய சித்தர் ஏலியனிடம் அனுமதி பெற்று தான் கோயிலை நிறுவியதாக சொல்லி இருக்கிறார். மேலும் ஆத்ம ரூபத்தில் வரும் ஏலியன்களோடு அவர் பேசி வருவதாக சொல்லி ஷாக்கை கிளப்பிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் சிவன் படைத்த இந்த உலகத்தின் முதல் உயிரினமாக இந்த ஏலியன்கள் இருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய அந்த சித்தர் அந்த உயிரினத்தின் சிலையை தான் இந்த கோவிலில் வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஏலியன்கள் ரூபத்தில் வருகிறார்கள்..
இதை அடுத்து என்ன புதிய புதிய விஷயங்களை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம் இந்த ஏலியன்களை நாங்கள் சூட்சும ரூபத்தில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதோடு இரண்டு முறை பேசி இருக்கிறார்.
மேலும் சினிமாவில் வரக்கூடிய ஏலியன்களை போல ஏலியன்களுக்கு கண்டிப்பாக கொம்பு இல்லை என்பதை சொன்ன அந்த சித்தர் சேலத்தில் பாதாள அறையில் ஏலியனுக்காக கோயில் அமைத்து வழிபாடுகளை செய்து வருகிறார்.
மேலும் ஆண், பெண் ரூபத்தில் ஏலியன்கள் இருப்பார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் சொல்லியிருக்கிறார். இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சிவ கைலாய ஆலயம் என்பதாகும்.
இங்கு இருக்கக்கூடிய சிவன் இரட்டை ஆவுடைய சிவலிங்கம் உலகத்தில் இதுவே முதல் இரட்டை ஆவுடைய சிவலிங்கமாக விளங்குகிறது.
வினோத வழிபாடு..
மேலும் இங்கு பஞ்சமி வராகி, நான்கு முகம் முருகன் இவ்வளவு தெய்வமும் இருக்கிறதே அத்தோடு ஏலியங்களுக்கான வழிபாடும் நடைபெறுகிறது. எனவே நீங்களும் ஏலியன்களை வணங்கி நன்மைகளை அடையுங்கள் என்று கூறி இருக்கிறார்.
சேலத்திற்கு அருகே இருக்கும் ராம கவுண்டனூர் என்ற பகுதியில் தான் இந்த ஏலியன் கோயில் அமைந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் இந்த கோயிலுக்கு சென்று ஏலியன் சாமியை தரிசித்து மகிழலாம்.
நீங்கள் நினைத்தது நடக்க ஏலியனை வேண்டினால் போதும் என்று கூறிய சித்தர் இந்த உலகத்தை காக்கவும் உலக மக்களுக்கு நன்மை செய்யவும் தான் ஏலியன்கள் இருப்பதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.