தமிழக பகுஜன் சமாஜத்தை சேர்ந்த கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் இரவு வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து தமிழகம் எங்கும் கடுமையான அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இது போல சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்நாளில் அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
48 வயதில் திருமணம் இரண்டு வயதில் குழந்தை..
சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி தெருவை சேர்ந்த வழக்கறிஞரான பகுஜன் சமாஜக் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 52 வயது நிரம்பியவர்.
இவர் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு அருகே நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனங்களில் வந்த சில மர்ம ஆசாமிகள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வளைத்து எதிர்பார்க்காத நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி அவரை சாய்த்தனர்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்த நண்பர்கள் அதை தடுக்க முற்பட்ட போதும் அவர்கள் மீதும் அருவாள் வெட்டு விழுந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நண்பர்களையும் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தாக்கி தப்பி சென்றது.
இதனை அடுத்து கூக்குரல் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை சென்னையில் இருக்கும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் அங்கு ஆம்ஸ்ட்ராங்கின் உயிர் பிரிந்தது.
சபதம் இட்டு தீர்த்துக்கட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்..
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? எதற்காக சபதம் இட்டு இவரை தீர்த்து கட்டினார்கள் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஆம்ஸ்ட்ராங்கின் தந்தையை பொறுத்த வரை அவர் திராவிட கழகத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிந்து இருக்கிறார்.
மேலும் அம்பேத்கரின் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடு இருக்கக்கூடிய ஆம்ஸ்ட்ராங் சிறு வயது முதல் கொண்டே அரசியலில் ஈடுபாடு கொண்டவராக திகழ்கிறார். இவர் பட்டியில் இன மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு பல போராட்டங்களையும் செய்தவர்.
2006-ஆம் ஆண்டு டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை தான் இருந்த பகுதியில் ஏற்படுத்தி இளைஞர்களை கவர்ந்தவர். ஏறக்குறைய 16 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருப்பவர்.
பல இளைஞர்கள் வக்கீலாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தனது பாதுகாப்புக் கருதி துப்பாக்கி ஒன்றை லைசன்ஸ் பெற்று பெற்றிருக்கிறார்.
48 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் புத்தமத கொள்கைகளின் படி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு வயது மகள் ஒருவரும் இருக்கிறார்.
யார் இவர் தெரியுமா?
கவுன்சிலராக இருந்த சமயத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை செய்திருக்கக் கூடிய இவரின் இறப்பு செய்தியை கேட்டு அனிதா சம்பத் முதல் கொண்டு வெகு ஜனங்களும் கதறி அழுது இருக்கிறார்கள்.
மேலும் 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட இவர் மீது ஏற்கனவே 13 வழக்குகள் இருந்தன அனைத்திலும் விடுதலையான போதிலும் இவரை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பது சகஜம்.
மேலும் இந்த கொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் சி சி டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது கொலையாளிகள் ஆறு பேர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை போல வந்திருக்கிறார்கள்.
அத்தோடு ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இது போலவே கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஸகட்சியின் மாநில தலைவரை கொலை செய்யப்பட்டு இருப்பதை அடுத்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை கேள்விக்குறி ஆகிவிட்டதாக அதிமுக பொது செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் கட்சிக்கு எதிரான பல விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.