சென்னையை விட்டு வெளியேறும் நடிகர்கள்.. நீரில் மூழ்கும் சென்னை..? பிரபல நடிகர் பகீர் தகவல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக கோயம்புத்தூர், சேலம், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள் என பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு ஒரு பக்கம் எடுத்துக் கொண்டு இருந்தாலும்.. நாங்களும் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்ற பெயரில் பொதுமக்களும் தங்களுடைய உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள தங்களுடைய உடமைகளை உயரமான இடத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக தங்களுடைய வாகனங்கள் கட்டில், பீரோ, மர சாமான்கள், மின்சாதனா பொருட்கள் ஆகியவற்றை வீட்டின் நான்காம் தளம் 5-ஆம் தளத்திற்கு நகர்த்தி கொண்டு செல்வது மற்றும் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி விடுவது.

பிஸ்கட், பால், பிரெட் பாக்கெட் ஆகியவற்றை வாங்கி குவிப்பது என தங்களால் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிஸ்கட் பாக்கெட் மற்றும் பால் பாக்கெட் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது சில பகுதிகளில் இவை கிடைப்பதே இல்லை என்ற புகாரும் எழுந்திருக்கின்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பணம் இருப்பவர்கள் சென்னையிலேயே உயரமான இடத்தில் இருக்கக்கூடிய ஹோட்டல்களுக்கு சில நாட்கள் வாடகைக்கு சென்று இருக்கின்றனர். பெரிய பெரிய ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர்.

மேலும் வசதி இருப்பவர்கள் வெளியூர்களுக்கு தற்காலிகமாக குடி பெயர்ந்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர்களும், தொழிலதிபர்களும் சென்னையை விட்டு வெளியேறி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் பலர் சென்னையிலேயே இல்லை என்ற தகவலும் வந்து கொண்டிருகின்றது.

இந்த மழை குறித்த அறிவிப்பு வெளியான போது சென்னையை விட்டு வெளியேறி வெவ்வேறு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது சிறு நடிகர்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

பிரபல நடிகர் ஸ்ரீமன் தன்னுடைய வீட்டை காலி செய்து கொண்டு வேறு மாவட்டத்திற்கு கிளம்பி இருக்கிறார். மறுபக்கம் சென்னை நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்று பிரபல நடிகரான அனுமோகன் சென்னை நீரில் மூழ்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கடுமையான காற்று வீசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று பீதியை கிளம்பி கொண்டிருக்கிறார். மறுபக்கம் பிரபலங்கள் பணம் படைத்தவர்கள் எல்லாம் சென்னை விட்டு காலி செய்து வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது..? என்ன நடக்கப்போகிறது..? என்று புரியாமல் தவித்து வருகிறார்கள் பொதுமக்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam