என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில்… பட்டப்பகலில் பிரபல யூட்யூபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் கொடுக்கக்கூடிய அளவு நடந்து வரும் சம்பவங்கள் வெகுஜன மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் ஏற்கனவே பகுஜன் சமாஜக் கட்சியின் மாநில தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிய வழக்கு பரபரப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படுகொலையானது இந்தியாவிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற வேளையில் மற்றொரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

என்ன நடக்குது தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டில் தற்போது என்னையா நடக்குது என்று கேட்கக்கூடிய அளவு சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் ஆனது இணையங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களில் பேசும் பொருளாகி விட்டது.

ஏற்கனவே youtuber பலர் அதிகரித்து உள்ள நிலையில் அவர்கள் பல வீடியோக்களை பொது வெளிகளில் படம் பிடித்து அவர்களது சேனலில் ஒளிபரப்பு வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அது போலத் தான் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் யூடியூபர்கள் இரண்டு பேர் மின்னணு பொருட்கள் வாங்குவது குறித்து தங்களது youtube காக வீடியோக்களை எடுக்க வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்த நபர்களை பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி என்று கூட நினைத்துப் பார்க்காமல் சாலையில் மது கடை திறப்பதற்கு முன்பே மதுபானங்களோடு இருந்த சிலர் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது ஏறி அமர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள்.

பட்டப் பகலில் பிரபல youtube இருக்கு நேர்ந்த கொடூரம்..

அப்படி போதையில் சரக்கு அடித்து வந்த இவர்கள் அந்த youtube-ல் தங்களை தவறாக வீடியோ எடுப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை மடக்கி பிடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கையில் இருந்த கேமரா செல்போன்களை பிடுங்கி ஆத்து மீறி ரககளையில் ஈடுபட்டார்கள்.

இதனை அடுத்து அவர்கள் கைகளில் ஆயுதம் இருந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த youtubeபர்கள்  தப்பி வந்திருக்கக் கூடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மக்களின் மத்தியில் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காவல் நிலையம் இருந்த நிலையில் அதையும் தாண்டி எந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

இதனை அடுத்து சமூக நலம் விரும்பிகள் சிலர் தமிழகத்தில் ரவுடிகளின் கைகள் கட்டப்படாமல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பி இருப்பதோடு சட்டம் ஒழுங்கு பற்றிய கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version