வார்த்தை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அதே பாணியில் பதிலடி கொடுத்த நடிகர் ரவி..!

தற்போது சாப்பிட சாப்பாடு இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போனோடு அலையும் கூட்டம் அதிகரித்து வருவது இயல்பாகிவிட்டது.

அந்த வகையில் ஆரம்பத்தில் குறைவான விலையில் நிர்ணயிக்கப்பட்ட 2G, 3G, 4G, 5G என தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அதன் சேவை கட்டணங்களும் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளா..

அந்த வகையில் தற்போது ஜியோ கம்பெனியானது 5g நெட் சேவையை அறிமுகப்படுத்திய நிலையில் அதன் நுகர்வு கட்டணத்தை அதிகரித்து இருப்பதை பார்த்து வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளாவிற்கு ஆப்பு வைக்க கூடிய வகையில் பதிலடி பதில்களை தந்திருக்கிறார் நடிகர் ரவி.

இதுவும் இந்த விலை உயர்வானது ஜூலை மூன்றாம் தேதியில் இருந்து அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஜியோ கம்பெனியின் டேரிப் கிட்டத்தட்ட 25 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக டாக்டர் ஷர்மிளா கூறியிருக்கிறார்.

அடுத்து டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இன் இந்தியா என்று கூறிய வண்ணம் எல்லோர் கைகளிலும் மொபைல் ஃபோன்களை கொடுத்துவிட்டு இப்போது சாமானிய மனிதர்களைக் கூட விட்டு விடாமல் சுரண்ட போகிறார்கள்.

இதற்கான நேர்த்தியான பணியை கார்ப்பரேட்டுகள் செய்ய இருப்பதாக ஓங்கி குரல் கொடுத்து பேசியிருக்கும் டாக்டர் ஷர்மிளா அரசாங்கமும், இதை தற்போதைய ஆளும் அரசாங்கமும் வேடிக்கை பார்த்து கைகட்டி நிற்பதாக சொல்லி இருக்கிறார்.

அதே பாணியில் பதில் கொடுத்த நடிகர் ரவி..

இதனை அடுத்து இதற்கு பதிலடி தரக்கூடிய வகையில் அதே பாணியில் நடிகர் ரவி பேசும் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஜியோ விலை ஏற்றத்தால் 2000 ரூபாய்க்கு பக்கம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்.

இதனை அடுத்து கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணம் குறித்தும் அது பற்றி ஏன் டாக்டர் ஷர்மிளா வாய் திறக்கவில்லை. அதுவும் மருத்துவராக இருக்கக்கூடிய இவர் கள்ளச்சாராயத்திற்கும் டாஸ்மார்க் இருக்கின்ற வேறுபாடுகள் என்ன இரண்டையும் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றி ஒரு வீடியோ கூட போடவில்லையே என்று பேசினார்.

மேலும் அவர் விருப்பப்பட்டாலும் விருப்பப்படவில்லை என்றாலும் மின்கட்டண உயர்வை எல்லோரும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதுபோல அன்றாட மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆவின் பால் பொருட்களின் விலையும் விண்ணளவு உயரும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ரிலையன்ஸ் கொள்ளையை பற்றி பேசும் இவர் இது போன்ற அடிப்படைத் தேவைகளை பற்றி பேசாமல் அவன் சுரண்டுகிறான் என்று சொல்லக்கூடிய இவருக்கு இவர் இருக்கின்ற கட்சி தன்னை சுரண்டுகிறது என்பதை சொல்ல முடியவில்லை என்பதை குத்திக்காட்டி விட்டார்.

மேலும் இவரது கணவர் விடுதலை சிறுத்தை இயக்கத்தைச் சார்ந்த எம்எல்ஏ என்பதால் அது பற்றிய விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு இது போன்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பது சரியா? என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

மேலும் கள்ளச்சாராய விபத்து பற்றியும் ஆவினில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர்வு பற்றியும் பேசுங்கள் ஷர்மிளா என்று சவால் விட்டிருக்கிறார்.

எம் என் சி பற்றி பேசுவது கார்ப்பரேட்டுகளை பற்றி பேசுவது இதையெல்லாம் விடுத்து விட்டு நீங்கள் படித்த படிப்புக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் நான் கூறிய விஷயங்களை நன்கு ஆய்வு செய்து விளக்கமாக பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமாக தற்போது இணையத்தில் வைரலாகி வருவது அவர் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version