அவர பார்த்தாலே வெட்கமா இருக்கும்.. Cinema ,Beach போவோம் சிரித்தபடி உண்மையை உடைத்த பிரபலம்..

இன்று பெற்றோர்கள் பார்த்து பெண் பார்த்தால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் காதலித்தும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் பிரபல அரசியல் குடும்பத்தைச் சார்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிரபலம் அண்மை பேட்டியில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

இந்த பிரபலம் தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வரின் மகனாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தின் முதல்வராகவும் திகழ்கிறார். இப்போது தெரிந்திருக்கும் அந்தப் பிரபலம் யார் என்று.

அவர பார்த்தாலே வெட்கமா இருக்கும்..

ஆம் நீங்கள் நினைப்பது போல் அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தான். திருமணம் ஆன புதிதில் கூட்டுக் குடும்பம் என்பதால் ஆரம்பத்தில் அவரோடு பேசுவதற்கே வெட்கம் ஏற்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயிலில் இருந்த சமயத்தில் அவர் கையில் அடிபட்டு இருந்த போது குடும்பத்தோடு அனைவரும் சென்று பார்த்த போது கூட அவரிடம் மனம் விட்டு பேசியதில்லை. இதற்கு காரணம் உறவுகள் அனைவரும் இருந்ததால் கூட அப்படி தோன்றி இருக்கலாம்.

Cinema ,Beach போவோம்..

எனினும் என் கணவரை பார்க்கும் போது எனக்கு கூடுதலாக வெட்கம் ஏற்படும் என்பதை சிரித்த முகத்துடன் கூறியதை அடுத்து அப்ப அவரைப் பார்த்தாலே உங்களுக்கு வெட்கம் வந்துடும் இல்லையா என்று தொகுப்பாளர் கேட்க ஆம் என்று ஆமோதித்தார்.

வீட்டில் கட்சிப் பணி இல்லாமல் இருக்கக்கூடிய சமயத்தில் தன்னை சினிமா, பீச் என பல இடத்திற்கு கூட்டி சென்றிருப்பதாகவும் தண்ணீர் எப்போதும் அக்கறையோடும் அன்போடும் இருப்பவர் தன் கணவர் என்று அன்பான காதலை அழகான வார்த்தைகள் மூலம் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி மு க ஸ்டாலினின் தன்மை பற்றியும் தன் மனைவி மீது கொண்ட காதல் பற்றியும் பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam