இணைய வள்ளல் ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு.. அதுவும் இந்த விஷயத்தை கேட்டு.. ஷாக்கில் நெட்டிசன்ஸ்..!

சினிமா படங்களில் நடிக்கின்ற நடிகர் நடிகைகளுக்கு ஏற்ப தற்போது இணையதளத்தில் பதிவுகளை பதிவேற்றி அதிகளவு ஃபாலோயிர்களை வைத்திருக்கும் இணைய வள்ளல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஹர்ஷா சாய் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து அனைவரையும் ஷாக்கிங்கில் தள்ளியுள்ளது.

24 வயதான youtube மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். பாரி வள்ளல் போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த ஹர்ஷா சாய் மீது அண்மையில் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

இணைய வள்ளல் ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு..

அதுவும் எப்படி பட்ட வழக்கு தெரியுமா? பாலியல் வழக்கு என்றால் உங்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படும். இவர் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கக்கூடிய ஹர்ஷா சாய் தன் மீது செலுத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு பொய் என்றும் பணம் பிடுங்குவதற்காக தான் இப்படி சொல்லி இருப்பதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்த இவர் யூடியூபில் மிகவும் பிரபலமானவர். இந்தியாவின் மிஸ்டர் பீஸ்ட் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படக்கூடியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சேனல்களை வைத்திருக்கிறார்.

இந்த சேனல்களின் மூலம் அவர் கஷ்டப்படும் நபர்களுக்கு பாரி வள்ளல் போல் பணத்தை வாரி இறைப்பது தான் இவர் செய்கின்ற ஒரே வேலை என்று சொன்னால் அது மிகையாகாது. வறுமையான நபர்களுக்கு உதவுவது கஷ்டப்படும் தொழிலாளிகளுக்கு பணத்தை வாரி கொடுப்பது என வாரி கொடுத்து மகிழ்ந்தவர்.

அப்படி உதவிய வீடியோக்களை தான் இவர் பதிவேற்றி லட்சக்கணக்கான மனங்களை கொள்ளை அடித்ததை அடுத்து இவரின் youtube ஐ ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

குறிப்பாக பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆன நிலையில் ஒரு வீடியோவில் குறிப்பிட்ட பங்கில் வாடிக்கையாளருக்கு நாள் முழுவதும் இலவசமாக பெட்ரோலை நிரப்பிக்கொள்ள தன் காசை செலவு செய்து பிரபலமானார்.

அதுவும் இந்த விஷயத்தை கேட்டு..

இந்நிலையில் நரசிங்கி காவல்துறை ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு மற்றும் மிரட்டல் குறித்த வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதில் மும்பையைச் சேர்ந்த 25 வயதான நடிகை பல தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஹர்ஷாசாயுடன் ஒரு படத்திலும் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இருவரும் ஒரு பார்ட்டியில் சந்திக்க நண்பர்களாக பழகத் தொடங்கியதை அடுத்து நாள் அடைவில் காதலாக மாறி நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த ஹர்ஷா சாய் தன்னுடன் உறவில் இருந்ததாக அந்த நடிகை தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு அந்த சமயத்தில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் வீடியோ எடுத்ததாக புகாரில் கூறியிருக்கும் அவர் இதனால் தற்போது மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை நடிகையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். மேலும் தங்களது விசாரணையை ஹர்ஷா ஷாயின் மீது தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய போலீசார் அதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்.மேலும் உண்மையை கண்டறிந்த பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு தற்போது கசிந்து வருகிறது

ஷாக்கில் நெட்டிசன்ஸ்..

இதனை அடுத்து இணையங்களில் இந்த விஷயம் வேகமாக பரவி வந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்கிங்கில் இருக்கிறார்கள். மேலும் இது பொய்யான புகார் என்று ஹர்ஷா சாய் தன் பக்கம் நியாயத்தை இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தாலும் இதன் உண்மை நிலை என்ன என்பது விரைவில் தெரியவரும்.

அது மட்டுமல்லாமல் வழக்கு தொடர்பாக விஜயவாடா வழக்கறிஞர் தனிகொண்டா சிரஞ்சீவி விளக்கம் அளிப்பார் என்று ஹர்ஷா சாய் தம்சப் போட்ட பதிவினை பதிவிட்டு இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam