மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் சர்வீஸ் சுவையின் ரகசியம் இது தான்..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

மாதம்பட்டி ரங்கராஜ் தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான சமையல் கலைஞர் ஆக இருக்கிறார். நடிகருமான இவர் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் இன் தலைமை நிர்வாகியாக இருக்கிறார்.

இந்த நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவு தொடர்பான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன் பிறகு திரில்லர் திரைப்படமான பெண்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் பொறியியல் மாணவராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் ஒரு கட்டத்தில் தங்களுடைய சகோதரர்களுடன் சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டார்.

பெங்களூருக்கு சென்று உணவகம் ஒன்றை தொடங்கினார். அதன்பிறகு மாதம்பட்டிக்கு திரும்பியதும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் சமையல் ஆர்டர்களை ஏற்று செய்ய ஆரம்பித்தார் ரங்கராஜ்.

பல்வேறு திரைப்பட குழுவினருடன் பணிபுரிந்து அவருக்கு தேவையான உணவினை படப்பிடிப்பு தளத்தில் வழங்கி வந்தார். இதன் மூலம் கிடைத்த நடிகர்களுடன் தொடர்பு திரை பிரபலங்களின் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளுக்கு சமையல் கான்ட்ராக்ட் கிடைக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தது.

குறிப்பாக நடிகர் கார்த்தியின் திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய கைப்பக்குவத்தை காட்டினார் மாதம்பட்டி ரங்கராஜ். இதனை தொடர்ந்து இவருக்கு பிரபலங்களின் கேட்டரிங் ஆர்டர் குவிய ஆரம்பித்தது.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் சுவையான விருந்து படைத்த காரணமாக இந்திய அளவில் பிரபலமானார். இவர் செய்யக்கூடிய கொய்யா சட்னி என்பது இவருடைய தனித்துவமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மட்டுமில்லாமல் பல்வேறு தனித்துவமான உணவு வகைகளை தன்னுடைய சமையலில் சேர்த்து கலக்கிக் கொண்டிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

இந்நிலையில் இவருடைய கேட்டரிங் சர்வீஸ் சுவையின் ரகசியம் என்ன..? என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜ் ஆரம்ப காலம் முதலே தன்னுடைய சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீர் சிறுவாணி ஆற்றின் தண்ணீர் தாதான்.

கோயம்புத்தூர் மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க எங்கு சென்றாலும் இவர் சமைக்க பயன்படுத்துவது சிறுவாணி ஆற்றின் தண்ணீரைத் தான் என்றும் எங்கு சென்றாலும் அந்த இடத்திற்கு சிறுவாணி தண்ணீரை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் செல்வார் என்றும் இது தான் இவருடைய கேட்டரிங் சர்வீஸின் ரகசியம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam