அட இது யாரு ? நம்ம தல தோனியா? கலக்கல் நியூ லுக்கில் அட்ராசிட்டி ஹேர் ஸ்டைல்..

விசில போடு என்று சொல்லி ரசித்த நம்ம தல தோனி பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் கிரிக்கெட்டில் களம் இறங்கி கலக்கிய போது அவர் ஹேர் ஸ்டைல் எப்படி இருந்தது என்பது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக மாறிய பிறகு இவரது ஹேர் ஸ்டைலும் மாறிய விபரம் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதனை அடுத்து தற்போது ஆள் பார்ப்பதற்கு ஹாண்ட்சமாக இருப்பதோடு புதிய ஹேர் ஸ்டைலில் காட்சி அளித்திருக்கிறார்.

அட இது யாரு ? நம்ம தல தோனியா?

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது யாரு நம்ம தல தோனி என்ற கேள்வியை முன் வைத்து இருப்பதோடு தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பற்றி பேசி வருகிறார்கள். உலகக் கோப்பையை வென்று கொடுத்த மிகச் சிறந்த மனித நேயம் மிக்க மனிதராக விளங்குகிறார்.

அதுமட்டுமல்லாமல் 20/ 20 போட்டிகளில் சென்னை கிங்ஸ் அணியின் தலைவராக விளங்கும் தல தோனி இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பேமஸான நபராகத் திகழ்கிறார்.

தற்போது 43 வயதான நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய ஹேர் ஸ்டைல் உடன் தோற்றம் அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்ற தல தோனியின் தற்போதைய புதிய ஹேர் ஸ்டைல் ஆனது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

கலக்கல் நியூ லுக்கில் அட்ராசிட்டி ஹேர் ஸ்டைல்..

இந்த கலக்கலான நியூ லுக்கில் காட்சியில் இருக்கும் தல தோனி அட்ராசிட்டி ஹேர் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை சொல்லிய வண்ணம் இருக்கிறார்கள்.

கடந்த முறை நீண்ட தலை முடி வைத்திருந்த தல தோனி இம்முறை பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்க கூடிய வகையில் புதிய ஹேர் ஸ்டைலை செய்து கொண்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த புதிய ஹேர் ஸ்டைல் ஹேர்ஸ்டைல் வடிவமைப்பாளரான ஆலிப் ஹக்கீம் என்பவர் வடிவமைத்து இருக்கிறார். தற்போது இந்த தோற்றத்தோடு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் வைரலாகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை போல ஹேர் ஸ்டைல் செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்ததை அடுத்து குழந்தைகளும் இருந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்ள விருப்பம் காட்டி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam