விடை பெற்றார் Nano நாயகன்.. ரத்தன் டாடா ஈடு செய்ய முடியா பேரிழப்பு..

டாடா குழுமத்தில் தலைவராக இருந்த ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.

டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் இருக்கும் பீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அவரது உயிர் பிரிந்துள்ளது.

86 வயதான ரத்தன் டாடா நல்ல தெளிவான மனநிலையில் இருப்பதாகவும் கவலைப்பட ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்து இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவர் டாடா நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து 2012 ஆம் ஆண்டு வரை டாட்டா நிறுவனத்தை வழி நடத்தியவர். மேலும் tata டெலி சர்வீஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை துவங்கினார்.

அத்தோடு 2004 ஆம் ஆண்டு டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்து மிக நேர்த்தியான முறையில் நடத்தினார். பார்சி சமூகத்தைச் சேர்ந்த இவர் 2000 ஆவது ஆண்டில் தேசத்தின் மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருதினை பெற்றவர். அதோடு இவர் பத்ம விபூஷன் விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வைத்த ரத்தம் டாடா பல்வேறு துறைகளில் சாதித்தவர். டாடா மோட்டார்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த இவர் 2009 ஆம் ஆண்டு நேனோ காரை அறிமுகம் செய்து குறைந்த விலையில் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து இவரை நானோ நாயகன் என்று அழைத்தார்கள்.

ரத்தன் டாடாவிற்கு சுமார் 3800 கோடி சொத்துக்கள் உள்ளதால் இனி அந்த சொத்துக்களை இவரது நான்கு வாரிசுகள் ஆட்சி செய்வார்கள் என்று சொல்லலாம். டாட்டா குடும்பத்தின் பல மில்லியன் டாலர் சொத்துக்கு வாரிசாக ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் நெவில் டாட்டாவின் மகள் விலங்குகிறார்.

மேலும் tata நிறுவனம் ஒப்பு முதல் சாப்ட்வேர் வரை பல்வேறு தொழில்களை செய்து மக்கள் மத்தியில் நல்ல அளவு ரீச் ஆன நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அம்பானியை பின்னுக்கு தள்ளக்கூடிய வகையில் நன்கொடைகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியவராக இருந்தார்.

85 வயதான ரத்தன் டாட்டா தனது கூர்மையான அறிவாற்றல் மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயத்திற்கு உதாரணமாக சொல்லப்பட்டவர் டாட்டா குடும்பத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரத்தன் டாட்டா மாயா, லியா மற்றும் நெவல் ஆகியோருக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர். இனி இவர்கள் டாட்டா குடும்பத்தில் முழு கவனத்தை செலுத்துவார்கள் என நம்பலாம்.

இதனை அடுத்து நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் ரத்தன் டாட்டாவின் மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தின் சார்பில் ரத்தன் டாட்டாவின் இழப்புக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam