nano

கோடி கோடியாய் பணம் இருந்தும்.. கேலி கிண்டலால் நிறைவேறாமல் போன ரத்தன் டாடாவின் கனவு..!

தற்போது டூவீலர்களின் எண்ணிக்கை எப்படி ஒவ்வொரு வீடுகளிலும் அதிகரித்து இருக்கிறதோ அதுபோல ரத்தன் டாட்டாவின் கனவே ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.

nano

அதற்காகத்தான் நடுத்தர வர்க்கமும் பயன்படுத்தக் கூடிய வகையில் டாட்டா கம்பெனி ஆனது நானோ காரை உருவாக்கி குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டுக்காக சந்தையில் கொண்டு வந்தது.

டாடா நேனோ கார்..

டாடா நேனோ கார் ஆனது டாடா குடும்பத்தின் கௌரவ தலைவர் ரத்தன் டாட்டாவின் மனதை சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் குறைந்த விலையில் கார் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த கார் ஆனது 2 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். இப்போது டாடா நானோ ஈவி வடிவில் வருகிறது. எனினும் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்த இந்த நானோ கார் பற்றி வேண்டாத தகவல் பரவியதை அடுத்து இதன் விற்பனை பாதிப்படைந்தது.

nano

 

மேலும் இன்று கூட இரு சக்கர வாகனங்களில் குடும்பமே பயணம் செய்யக்கூடிய நிலைமை இந்தியா முழுவதுமே உள்ளது. இதையெல்லாம் பார்த்துதான் நடுத்தர வாழ்க்கை மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் நானோ காரை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அவருக்கு நட்டம் ஏற்பட்டு இருந்தாலும் இந்தியர்களுக்காக இதை செய்தார்.

கேலி கிண்டலால் நிறைவேறாமல் போன ரத்தன் டாடாவின் கனவு..

இந்த காரை புழக்கத்தில் கொண்டு வந்ததை அடுத்து துளி கூட அவருக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் அவரது கனவு ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் கார் என்பது ஆழமான எண்ணமாக இருந்தது ‌.

இந்த கார் மூலம் தனது நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களும் பயன்பெறும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த வண்டியானது சந்தைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கேலி கிண்டல் காரணமாகவும் காரின் விற்பனை அடியோடு சரிந்தது.

மேலும் நேனோ கார் உற்பத்தி செய்த ஆலையை இயக்க முடியாத அளவுக்கு நட்டத்தில் கொண்டு சேர்த்தது. சின்ன கார் விலை மலிவான கார் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பேசும் பொருளான இந்த நானோ கார் வேறு கார்களை உற்பத்தியை செய்கின்ற போட்டி நிறுவனங்களின் கூட்டு சதியால் விமர்சனங்களால் நக்கலும் கிண்டலும் எழுந்தது.

tata

இதனை அடுத்து நானோ காரின் மீது மக்களின் ஈர்ப்பு குறைந்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். இதனை அடுத்து இதன் உற்பத்தியை பாதிக்க கூடிய வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவியது.

எனவே ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தன் டாடா தன்னிடம் கோடி கோடியாய் பணம் வைத்திருந்த போதும் அந்த ஆசை நிறைவேறாமல் நிராசையாய் போனது. இந்நிலையில் இவரது கனவு தற்போது நிறைவேறாமல் போனாலும் வரும் காலங்களில் இவரது கனவு கண்டிப்பாக நிறைவேறும்.

அந்த வகையில் ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் ஒரு கட்டாயம் ஒரு கார் இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்து சென்றிருக்கிறார்.

--- Advertisement ---

Check Also

chennai floods

சென்னையை விட்டு வெளியேறும் நடிகர்கள்.. நீரில் மூழ்கும் சென்னை..? பிரபல நடிகர் பகீர் தகவல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துக் …