ரத்தன் டாடாவின் காதல் முறிவு பற்றி பலரும் அறிந்திடாத தகவல்..!

பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் ரத்தன் டாடா நேற்று இரவு காலமானார். டாடா சன் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக விளங்கியவர் டாட்டா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பணி புரிந்திருக்கிறார்.

வயது முதுமை காரணமாக இடையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரத்தன் டாடாவின் காதல் முறிவு..

ரத்தன் டாட்டாவின் மறைவு இந்தியா முழுவதும் ஒரு மிகப்பெரிய அதிவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு விளையாட்டு பிரபலங்கள் பொதுமக்கள் தொழிலதிபர்கள் என அனைவரும் அன்னாரது இழப்புக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ரத்தன் டாடா ஒரு மிகச்சிறந்த தொழில் முனைவோர் மற்றும் இன்றி பொதுமக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தவர். இளம் வயதிலேயே டாட்டா குடும்பத்திற்கு பல்வேறு யோசனைகளை தனது கூறிய புத்தியால் கொடுத்து அந்த குழுமத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியை செய்தவர்.

மேலும் இவரது புதுமையான ஆக்கப்பூர்வமான வணிக யோசனைகள் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்த வகையில் இருந்ததால் அவரை ரோல் மாடலாக கொண்டு பலர் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ரத்தன் டாடா கடைசி வரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று என்றாவது ஒருமுறை நீங்கள் யோசித்து இருப்பீர்களா? எவ்வளவு செல்வம் கொட்டிக் கிடக்கும் போது அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததின் ரகசியம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தனது காதல் தோல்வி குறித்து ரத்தன் டாடாவே ஒருமுறை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற பேட்டியில் பேசியிருந்தால் மேலும் தனது காதல் குறித்தும் தனக்கு நடை பெற இருந்த திருமணம் நின்று போன விஷயம் குறித்து விரிவாக தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் ரத்தன் டாடா தனக்கு பல காதல் உறவுகள் இருந்ததாக வெளிப்படையாக பேசியிருந்தார். ஆனால் இந்த காதல் உறவும் அவருக்கு திருமணத்தில் முடியவில்லை என்ற சோகத்தையும் வெளிப்படுத்தினார்.

இவர் லாஸ் ஏஞ்சலில் வசித்த போது ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அந்த பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எனினும் அவரது அந்த நம்பிக்கை கடைசியில் வீண் போனது. இதற்கு காரணம் இவரது பாட்டியின் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததால் உடனே இந்தியா வந்துவிட்டார்.

அப்படி இந்தியா வந்த சமயத்தில் தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் வெடித்தது. இதனை அடுத்து அந்தப் பெண்ணை அவரது பெற்றோர்கள் இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருவரும் தெரிந்து விட்டது காரணத்தால் அவரது திருமணம் நடக்கவில்லை என்ற குண்டை போட்டார்.

பலரும் அறிந்திடாத தகவல்..

இந்நிலையில் தனக்கு வேறு காதல் உறவுகள் இருந்ததாகவும் எனது மனைவி என்று நினைக்கும் அளவுக்கு யாரையும் இவர் கடைசி வரை பார்க்க முடியவில்லை என்ற கருத்தையும் பதிவு செய்ததோடு அது குறித்து இன்று வரை தான் வருத்தப்பட்டதில்லை என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் காதல் தோல்வியை அடைந்த ரத்தன் டாடா தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உலகப் பணக்கார வரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் காதல் தோல்வியால் முடங்கி போடாமல் எதையும் ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டு அவர் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு இருப்பதால் இன்றைய இளைஞர்கள் அவரது வாழ்க்கையையும் அவரது காதல் தோல்வியை நினைத்து அவர் துவண்டு விடாமல் செயல்பட்டது போல செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam