ரத்தன் டாடாவின் அந்த கடைசி ஆசை.. நிறைவேற இன்னும் கொஞ்சம் மாசம்தான் இருந்துச்சு.. வேதனையில் இருக்கும் ஊழியர்கள்..!

மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. டாடா குழுமமானது மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் கால் ஊன்றி தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருகிறது.

25க்கும் அதிகமான நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகிறது டாடா நிறுவனம். அழகு சாதன பொருட்களில் துவங்கி, கார், தொழில்நுட்பம் மருத்துவ பொருட்கள் என்று பல விஷயங்களையும் விற்பனை செய்து வருகிறது டாடா  நிறுவனம்.

ரத்தன் டாடாவின் அந்த கடைசி ஆசை

இவ்வளவு விஷயங்களை விற்பனை செய்தும் கூட டாடா நிறுவனம் ஏன் அது பெரும் பணக்காரர்கள் லிஸ்டில் வரவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் ரத்தன் டாட்டாவின் உதவி மனப்பான்மையே, ஒவ்வொரு வருடமும் அவருக்கு வரும் லாபத்தில் அதிக தொகையை தானமாக செலவு செய்து வந்தார்.

அதனால் இன்று அவருடைய இழப்பு என்பது பலருக்கும் பெரிய இழப்பாக இருந்து வருகிறது. அனைவருக்கும் ஒரு கார் இருக்க வேண்டும் என்கிற விஷயம் தான் அவரின் பெரும் கனவாக இருந்தது. இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது ரத்தம் டாடாவின் ஆசையாக இருந்தது.

வெளியிட்ட கார்

இதற்காக அவர் ஆரம்பித்த டாடா நிறுவனத்தில் குறைந்த விலையில் டாடா நானோ என்கிற ஒரு காரை அறிமுகப்படுத்தினார். இந்த காரில் ஐந்து பேர் வரை அமர முடியும். ஒரு குடும்பம் தாராளமாக இந்த காரில் பயணம் செய்ய முடியும்.

2008 ஆம் ஆண்டு வெளியான இந்த கார் ஒரு லட்ச ரூபாய் விலைக்கு வெளியானது அப்பொழுது அந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் போகப் போக இயந்திரங்களின் விலை அதிகரித்ததன் காரணமாகவும் காரின் பாகங்கள் விலை அதிகரித்ததன் காரணமாகவும் அந்த காரின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த காரின் விற்பனை இதனால் சரிந்தது. இருந்தாலும் கூட குறைந்த விலையில் காரை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்ந்து ரத்தன் டாட்டாவின் கனவாக இருந்து வந்தது. இந்த நிலையில் இப்பொழுது தனிமனித பொருளாதாரம் என்பது இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது.

வேதனையில் இருக்கும் ஊழியர்கள்

ஒரு லட்ச ரூபாய் என்பது இப்பொழுது ஒரு இந்தியனுக்கு முன்பை விட எளிதான விஷயமாக இருக்கிறது இதனை அடுத்து இப்பொழுது பேட்டரி வாகனங்களின் யுகம் துவங்கியிருப்பதால் டாடா நானோ வாகனத்தை பேட்டரி வாகனமாக அறிமுகம் செய்திருந்தார் ரத்தன் டாடா.

இது சந்தைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்களாக இருந்து வந்தன சில மாதங்களில் அவருடைய கனவு நினைவாக இருந்த நிலையில் இப்பொழுது உயிரிழந்து இருக்கிறார் ரத்தன் டாடா. இது அவரது ஊழியர்கள் பலருக்குமே மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam