வெள்ள அபாய எச்சரிக்கை முதல்.. மீனவர் பாதுகாப்பு வரை.. அரசு வெளியிட்ட புது செயலி.. சிறப்பான சம்பவமா இருக்கே..!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே எந்த ஒரு விஷயத்திலும் கொஞ்சம் அதிக தொழில்நுட்ப வளர்ச்சியை தொட்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக ரேஷன் கார்டை டிஜிட்டல் மயமாக்கி ஸ்மார்ட் கார்டாக கொண்டு வந்தனர். அதேபோல நிறைய தொழில்நுட்ப மாற்றங்களை தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்து கொண்டுள்ளது.

அந்த வகையில் இன்று காலநிலையை கண்டறியும் புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறும்பொழுது மழை அளவில் துவங்கி காலநிலை மாற்றம் வரை பல விஷயங்களை இந்த டி.என் அலர்ட் என்கிற இந்த செயலி நமக்கு தெரிவிக்கும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வானிலை மாற்றம், மழையின் அளவு, நீர் தேக்கங்களில் எவ்வளவு நீர் இருக்கிறது என்கிற விவரங்கள், வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தமிழ்நாட்டில் பெறப்பட்ட மழையின் அளவு, மாதிரியான பல தகவல்கள் இந்த செயலியில் இருப்பதாக கூறி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

எனவே இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாக செய்திகளை பார்க்காமலேயே நம்மால் தொடர்ந்து காலநிலை மாற்றம் மற்றும் மழையளவு போன்ற பல விஷயங்களை பார்க்க முடியும்.

மீனவர் பாதுகாப்பு

இந்த நிலையில் இந்த செயலியில் தொடர்ந்து மீனவர்களுக்கு உதவும் வகையில் கன மழை தொடர்பான விவரங்கள். புயல் தொடர்பான எச்சரிக்கைகள் போன்ற விஷயங்களை அடுத்து சேர்க்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதுமட்டுமன்றி சென்னையில் அடிக்கடி வெள்ளம் வரும் பிரச்சனை இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த விஷயங்களையும் இந்த செயலியில் சேர்க்க இருப்பதாக கூறுகின்றனர். இப்படி வெள்ள அபாய எச்சரிக்கையை இந்த செயலியில் சேர்க்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுக்கவும் ஆற்றுக்கரை ஓரமாக இருக்கும் ஊர்களுக்கு அதிக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த செயலிக்கு வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam