திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா நோக்கி சற்று முன் புறப்பட்ட AXB613 என்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
விமானத்தை டேக் ஆப் செய்த விமானி விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் இருப்பதை கவனித்து உடனடியாக அந்த விமானத்தை தர இறக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் சார்ஜா வரை செல்ல வேண்டிய விமானம் என்பதால் விமானத்தில் முழுதாக எரிபொருள் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை இவ்வளவு எரிபொருளுடன் தரை இறக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் எரிபொருள் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் பயங்கரமான தீ விபத்து அல்லது விமானம் வெடித்து சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் விமானத்தில் உள்ள எரிபொருள் தீரும் வரை திருச்சியை சுற்றி வட்டமடித்து எரிபொருள் அனைத்தையும் தீர்ந்த பிறகு சிறிய அளவில் எரிபொருள் இருக்கும் நேரத்தில் விமானத்தை பாதுகாப்பாக தர இறக்கலாம் என்ற முடிவில் விமானி செயல்பட்டு வருகிறார் என தெரிகிறது.
உலகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான நபர்கள் இந்த விமானத்தின் ஓடுபாதையை தற்போது நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள், பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினர், செவிலியர்கள், மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கான பேர் குவிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதனால் திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு விலநிலவி வருகிறது. 141 பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய உயிர்க்கு உடைமைக்கும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக விமானம் தரையிறங்க வேண்டி பலரும் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடைய பிரார்த்தனையில் நாமும் இணைந்து கொண்டு இந்த நல்ல நாளில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது. பயணிகள் பாதுகாப்பாக அவர்களுடைய இல்லம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
சற்று முன் (08:15 PM ) இந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
இந்த விமானத்தின் செயல்பாட்டை https://www.flightradar24.com/AXB613/377eed3e என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.