கழிவறைக்கு வைத்த தண்ணீர்.. வழியில்லாமல் ரசிகர்கள் செய்த செயல்.. த.வெ.க மாநாட்டில் அவலம்..!

கடந்த ஜனவரி மாதம் கட்சி துவங்குகிறேன் என்று விஜய் கூறிய நாளிலிருந்து விஜய் எப்பொழுது அரசியல் களத்தில் இறங்க போகிறார் என்பது ரசிகர்களுடைய ஆசையாக இருந்து வந்தது.

நடிகர் விஜய் கடந்த 10 வருடங்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து அரசியலில் இறங்காமலே இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த வருட ஜனவரி மாதம்தான் வெளிப்படையாகவே கட்சி துவங்கப் போவதாகவும் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் விஜய் அறிவித்தார்.

கழிவறைக்கு வைத்த தண்ணீர்

அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே தன்னுடைய கட்சி கொடியின் பெயர் தன்னுடைய கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பெயர் ஆகியவற்றை அறிவித்தார் விஜய். இதனை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து விஜய்க்கு அரசியல் களத்தில் ஆதரவு கொடுக்க தொடங்கினர்.

இந்த நிலையில் தற்சமயம் அதன் முதல் கட்டமாக தமிழக அளவிலான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய். இந்த மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இன்று துவங்க இருக்கிறது. இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் செய்த செயல்

அதேபோலவே இன்று காலையிலிருந்து ரசிகர்கள் அதிகமாக வரத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட இப்பொழுது எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை கொடுத்தனர். ரசிகர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி கழிப்பறை வசதி போன்ற அனைத்தையும் செய்து கொடுத்திருந்தாலும் கூட தற்சமயம் வந்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

த.வெ.க மாநாட்டில் அவலம்

இதனை அடுத்து சாவர்க்கர் மாநாட்டில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தண்ணீருக்காக அதிகமாக அலைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் கழிவறைக்காக ஒதுக்கப்பட்டு நிரப்பப்பட்டு வைத்திருக்கும் தண்ணீரைப் பிடித்து கொடுத்து குடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதை சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam