இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்..!

1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் இந்தியன். அந்த திரைப்படத்தின் தொடராக இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது.

முதல் நாளே இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்திருக்கின்றன. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை அதில் கதைகளுமே சிறப்பாக இருந்தது என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருக்கிறார். ஆனால் அனிருத் இசை ஏ.ஆர் ரகுமானின் இசை அளவுக்கு இல்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்தியன் 2 ப்ளானிங்:

இதுக்குறித்து ஷங்கர் கூறும்போது படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த பொழுதே இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை துவங்கி விட்டோம். அப்பொழுது ஏ.ஆர் ரகுமான் 2.0 திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் அனிருத்தை இந்தியன் 2 படத்திற்கு தேர்வு செய்தோம் என்று கூறியிருக்கிறார்.

என்னதான் சமாதானம் கூறினாலும் கூட இந்தியன் 2 திரைப்படம் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது யூ ட்யூப் சேனலில் இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வழங்கி இருக்கிறார்.

பொதுவாகவே ப்ளூ சட்டை மாறன் தமிழ் திரைப்படங்களை எதிர்மறையாகதான் விமர்சித்து வருவார். அவர் ஒரு திரைப்படத்தை நல்ல விதமாக விமர்சிப்பது என்பது அரிதிலும் அரிதான விஷயமாகும்.

விமர்சித்த விமர்சகர்:

இந்த நிலையில் இன்று காலை முதலே இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்து விட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து படம் தொடர்பாக பல மீம்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் இருந்து தப்பித்துவிட்டார் என்றும் கூறி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

ஏனெனில் இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே அதில் ரஜினிகாந்த் தான் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது. ஆனால் அப்பொழுது சில சூழ்நிலைகள் காரணமாக கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார்.

ஒருவேளை ரஜினி கதாநாயகனாக நடித்திருந்தால் இப்பொழுது இந்தியன் 2விலும் அவர் தான் நடித்திருப்பார் என்று கூறி அதனை கிண்டல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட மீம் எல்லாம் அதிக பிரபலமாகி வருகின்றன. மேலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக தோல்விதான் அடையும் என்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version