கிட்டத்தட்ட 13 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இன்று திரைக்கு வந்திருக்கிறது மதகஜராஜா ( MadhaGajaRaja ) திரைப்படம். இது தமிழ் திரை உலகில் ஒரு புதிய சாதனை என்று கூற முடியும்.
ஏனென்றால், ஆயிரக்கணக்கான படங்கள் இன்னும் வெளியாகாமல் கிடக்கின்றன. ஆனால், நடிகர் விஷாலின் படம் வெளியாகாது. இது அவ்வளவுதான் கதை முடிந்தது என்று எல்லோரும் அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது.. நான் வரேன் என்று மத கஜ ராஜா வந்திருக்கிறார்.
படம் எப்படி இருக்கிறது..? என்று வாருங்கள் பார்க்கலாம்.
கதாநாயகன் அவருடைய மூன்று நண்பர்கள் தன்னுடைய பள்ளி ஆசிரியரின் மகளுடைய திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். அந்த மூன்று நண்பர்களில் ஒரு ஒரு நண்பர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்பதை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார்.
இன்னும் இரண்டு நண்பர்கள் தங்களுக்கு இருக்கும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சினையை கதாநாயகனிடம் கூறுகிறார்கள். கதாநாயகன் இந்த இரண்டு பிரச்சினையை தீர்க்கும் போது சந்திக்கக்கூடிய புது புது பிரச்சனைகள் என அதிரடியான திருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நகைச்சுவையான திரைக்கதையுடன் நகர்கிறது திரைப்படம்.
அந்த இரண்டு நண்பர்களின் பிரச்சனை என்ன..? அதை கதாநாயகன் தீர்த்து முடித்தாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் ஒரு சில வருடங்கள் தள்ளி போய் சில படங்கள் வெளியானாலே அந்த படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பும் இருக்காது. அந்த படம் பழைய படம் என்ற லிஸ்டில் சேர்ந்து விடும்.
ஆனால், மத கஜ ராஜா அப்படி பழைய படம் என்ற லிஸ்டில் சேராமல் தப்பித்து புத்தம் புது படமாக வெளியாகி இருப்பது தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனை.
நாம் சிறுவயதாக இருக்கும் போது நமக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பினால் எப்படி ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் நமக்குள் தப்பிக்கொள்ளுமோ… அதே போன்ற ஆர்வம், எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண சென்றனர்.
அவர்களுடைய எதிர்பார்ப்பை இயக்குனர் சுந்தர் சி பூர்த்தி செய்து இருக்கிறாரா..? என்பதை பார்ப்போம்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் விஷால் தன்னுடைய பீக் டைமில் இருந்த நடை, உடை, பாவனை முடித்து நடனம் சண்டை காட்சிகள் என அனைத்தையும் பட்டய கிளப்பியிருக்கிறார்.
பழைய விஷாலை பார்க்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இந்த படம் பயங்கர விருந்தாக அமையும். இந்த படத்தில் இருந்த இதே ஸ்பீடில் அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தால் சிவகார்த்திகேயனுக்கு இன்று தமிழ் சினிமாவில் என்ன இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் விஷால் இருந்திருப்பார்.
நடிகர் சந்தானத்தின் காமெடி காட்சிகள் சொல்லவே வேண்டாம். அதே டைமிங்.. அதே டயலாக் டெலிவரியுடன் தன் பங்குக்கு பட்டையை கிளப்புகிறார். அப்படியே 10 வருடத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ.. அந்த அனுபவத்தை நம்மிடம் கொடுத்து விடுகிறார்.
ஆனால் சந்தானத்தின் டிராக் மாறி தற்போது ஆளை மாறி போய்விட்டார் என்பது வேறு கதை. மற்றபடி படம் எப்படி இருக்கிறது..?
படத்தின் திரைக்கதை முழுதும் காமெடி கலவரமாக இருக்கிறது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. சுந்தர் சி படம் என்றால் கொஞ்சம் கிளாமர் இருப்பது இயல்புதான்.
ஆனால், நடிகை அஞ்சலி, நடிகை வரலட்சுமி காட்சிகள் எல்லாம் கிளாமரில் தாறுமாறாக எகிறி அடித்திருக்கிறார் சுந்தர் சி. சில காட்சிகள் முகம் சுளிக்கவும் வைக்கின்றது என கூட கூறலாம்.
ஆனால் சுந்தர்சி படங்கள் என்றாலே கிளாமர் இருக்கும் என்று நம்பி செல்லும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஏமாற்றமாக இருக்காது. முழு கமர்சியல் படமாக இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
முழு ஆக்சன் ஹீரோவாக இருந்த விஷால் ஒரு கமர்சியல் ஹீரோவாக தன்னை நிரூபித்திருக்கக்கூடிய படம் மத கஜ ராஜா. சந்தானம் இவருடைய காமெடியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. மனுஷன் ஹீரோவா தான் நடிப்பேன் என ட்ராக் மாறி போயிட்டாரே என்ற ஏக்கமும் தோன்றுகிறது.. சந்தானம் காமெடியை மிஸ் செய்கிறோம் என்ற உணர்வும் நமக்குள் வந்து செல்கிறது.
மனோபாலா சந்தானம் விஷால் காமெடி காட்சிகள் உச்சகட்ட ரகளை. படத்தினுடைய மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் படத்தில் இருக்கக்கூடிய கிளாமரான காட்சிகள் என்று கூறலாம். இந்த இடத்தில் கிளாமர் வேண்டுமா..? என்று கேட்கும் அளவுக்கு கஞ்சத்தனம் பார்க்காமல் கிளாமரை அள்ளி தெளித்துவிட்டு இருக்கிறார் சுந்தர் சி.
மட்டுமில்லாமல் ஆங்காங்கே வரக்கூடிய லாஜிக் ஓட்டைகள் சிந்திக்க வைக்கிறது. மொத்தத்தில் 13 வருடம் கழித்து இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது என்றாலும் ரசிகர்களை கவரும் படமாகவே வெளியாகி இருக்கிறது.
ஒரு வெற்றி படம் எப்போது வெளியானாலும் அது வெற்றிப்படம் தான் என்பதை மதகஜராஜா நிரூபித்திருக்கிறது. மட்டுமில்லாமல் இந்த படத்துடன் வந்த ஏனைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் மதகஜராஜா நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, ஜெமினி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் ஒரு கம்பேக் படமாக இருக்கும்.. அடுத்தடுத்த தயாரிப்புகளில் ஜெமினி ஃபிலிம்ஸ் இயங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
ப்பா.. என்னா ஷேப்பு.. வயசு பசங்க நெஞ்சில் தீயை வைத்த வரலட்சுமி சரத்குமார்..! வைரல் போட்டோஸ்..!