“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!

இன்று என்ன திருவிழாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எதற்கு என்றால் தளபதி விஜய்யின் தி கோட் [G.O.A.T ]திரைப்படத்தை முதல் ஷோவில் பார்ப்பதற்காகத்தான் ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள்.

அப்படி விஜயின் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதை சுவைத்து படத்தின் முதல் பகுதியை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள். அது பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படத்துக்கு தளபதி விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயர் எதற்கு வைத்தார்கள் என்றால் இந்தப் படத்தின் முதல் பகுதி முடியும் போதே உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும்.

இரண்டாவது பகுதியில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற அந்த உணர்வுகளை ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள் முதல் பகுதியை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த முதல் பகுதியானது ஒரு முழுமையான கலவையான எமோஷன் ரீதியான படம்.

இதில் விஜய் உடைய அழகு திறமை அனைத்தும் வெளிப்பட்டுள்ளது. இதனை எல்லாவற்றையும் சம ரீதியில் எடுத்து அரைத்து ஒரு காக்டைல்லாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எல்லாமே முதல் பகுதியில் உள்ளது. வெங்கட் பிரபு கூறியது போல மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு கிளப்பிங் மூமென்ட் இருக்கும் என்று சொன்னதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் மூன்று நிமிடங்களுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் கைதட்டி விசில் அடிப்பீர்கள்.

உலக தரத்தில் இந்த படம் இருப்பதாலும் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அமர்ந்து பார்க்கக்கூடிய படமாகவும் உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் மிகச் சிறப்பான முறையில் நகர்ந்து செல்கிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் சினேகாவுக்கு இடையே நடக்கக்கூடிய விஷயங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

 

குடும்பத்தில் ஒவ்வொருவரும் எப்படி அன்பால் பிணைந்து இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இவர்கள் இருவரையும் சொல்லக்கூடிய அளவு மிகச் சிறப்பாக காட்சிகள் அமைந்துள்ளது. இதுவரை 67 படங்களில் நடித்திருக்கும் விஜயை இந்த படத்தில் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பார்க்க முடியும்.

இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் வெளியே சென்றாலும் உங்கள் அம்மா உங்கள் உறவுகள் உங்கள் காதலி என அனைவரிடமும் விஜயை பற்றி கட்டாயம் பேசுவீர்கள் அந்த அளவு இதில் சம்பவம் செய்திருக்கிறார்.

படத்தின் கேமராமேன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும் விஜயின் பிறந்தநாள் சமயத்தில் அப்பா விஜய் மகன் விஜய் பைக்கில் செல்லும் போது நடக்கும் ஃபைட் சீக்வன்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது.

இசையைப் பற்றி பேசும் போது ரீமிக்ஸ் ஆக வந்திருக்கும் பாடல் வெங்கட் பிரபு சொன்னபடி பக்காவாக இருப்பதோடு அதில் தளபதி மற்றும் சினேகாவின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. முதல் பகுதியில் இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளது.

யூடியூபில் பாடல்களைப் பார்த்து நெகடிவ் கமெண்ட்கள் சொன்னவர்கள் யாராக இருந்தாலும் படத்தை பார்த்தால் கட்டாயம் அந்த நெகட்டிவ் கமெண்ட்களை தள்ளிவிட்டு படத்தின் சிறப்பை மட்டுமல்ல பாடல்களின் நேர்த்தியையும் இசையையும் அற்புதமாக பேசுவார்கள். இதில் குறிப்பாக பேக்ரவுண்ட் மியூசிக் சிறப்பாக வந்துள்ளது.

படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் தெறிக்க விட்டிருக்கிறார் எனவே ஹேஸ் டேக் யுவன் பற்றி வருவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. இந்தப் படத்தில் தொடாததே இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கக் கூடிய வகையில் குடும்ப படமாக உள்ளது.

தளபதி மற்றும் இளைய தளபதி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கு இவற்றை நீங்கள் சில நிமிடங்கள் யூகித்தாலும் அதன் பின் வரக்கூடிய காட்சிகள் அற்புதமான முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வி.ஐ.ஜி டெக்னாலஜி இந்த படத்தில் சிறப்பாக வேலை செய்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version