“படத்துல அது இல்ல.. அதுக்குள்ள தான் படமே இருக்கு.. “ வேட்டையன் விமர்சனம்..! படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ளது வேட்டையன் திரைப்படம்.

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை குறித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் என்ன வரவேற்பு பெற்று இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கின்றது.

நடிகை விருமாண்டி அபிராமியும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து இடம்பெற்ற மனசிலாயோ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது வரை ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த பாடல் இந்த படத்திற்கு மிகப்பெரிய புரொமோஷன் ஆகவும் அமைந்தது.

160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது இலையில் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் வாருங்கள் பார்க்கலாம்.

முதல் 20 நிமிடம் சூப்பர் ஸ்டாரை கொண்டாடலாம். அனிருத்தின் பின்னணி இசை நன்றாக உள்ளது. எமோஷனல் காட்சிகள் பிணைப்பை ஏற்படுத்துகிறது. துஷாரா விஜயன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஃப்ஹத் பாசில் வேடிக்கை காட்டுகிறார் என்கிறார் இந்த ரசிகர்.

கண்டெண்டில் மாஸ் இல்லா.. மாஸ்ல தான் கண்டென்ட் இருக்கு..

முதல் பாதி அருமை.. ஈடுபாட்டுடன் செல்கிறது..

எதிர்பாராத திருப்பங்கள்..

முதல் பாதி சூப்பர்

சராசரி படத்த்துக்கும் கீழ..

முதல் 20 நிமிஷம் ரஜினி மாஸ்..

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version