ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்.. அதில் ஜெயிலரை பின்னுக்கு தள்ளிய வேட்டையன்..! திரை விமர்சனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளி வந்த வேட்டையன் திரைப்படம் அதிகாலை 4 மணி முதற்கொண்டு பெங்களூர், அமெரிக்கா, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இருந்தது என்பதை அவர்கள் youtube சேனல்கள், ட்விட்டர் மற்றும் மீடியாக்களுக்கு அளித்த விமர்சனங்களை பொறுத்து நாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்..

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.செ ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் அமிதாப்பச்சனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அபிராமி, துஷ்ரா விஜயன், ரித்திகா சிங், ரோகினி மற்றும் ரக்சன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தை தங்களது வேலையை பக்காவாக செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அனிருத் இசையமைத்த மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்பி வரும் நிலையில் வேட்டையன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது கருத்துக்களை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜெயிலரை பின்னுக்கு தள்ளிய வேட்டையன்..

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து ஒரு மிகப்பெரிய ஹீட்டை ரஜினிக்கு கொடுத்தது.

எனினும் ஜெயிலர் படம் காட்டிய வேகத்தை விட படுமாஸாக வேட்டையன் படம் இருப்பதாகவும் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும் ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை என்பதை ரசிகர்கள் ஒவ்வொருவரும் சொல்லியிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரை தாண்டி இந்த படத்தில் பகத் பாஸில் வரும் காட்சிகள் அனைத்தும் அடிபொலியாக உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்து விட்டார் என்பதையும் கூறி இருக்கிறார்கள்.

மேலும் அடுத்து என்ன, என்ன என்று ஆவலை தூண்டக்கூடிய வகையில் அமர்ந்திருக்கும் சீட்டின் நுனிக்கி உங்களை அழைத்துச் செல்லக் கூடிய வகையில் திரைக்கதையை மிக நேர்த்தியான முறையில் இயக்குனர் ஞானவேல் செம தியாக படைத்திருக்கிறார்.

எனவே இந்த திரைப்படமானது ரஜினியின் கேரியரில் பிளாக்பஸ்டர் படமாக நிச்சயமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை விட வேட்டையன் படம் அதிக வசூலை கொடுத்து ரெக்கார்டு பிரேக் செய்யும்.

முதல் காட்சியை பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள் தலைவர் மாஸ் என்ற கோஷங்களை எழுப்பி வருவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு மிகச்சிறந்த படமாக இந்த படம் வந்துள்ளது.

மேலும் எக்ஸ் தள பக்கங்களில் வேட்டையன் குறித்து பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இணையம் எங்கும் வேட்டையன் படம் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.

அட எங்க கிளம்பிட்டீங்க நீங்களும் வேட்டையன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தற்போது கிளம்பி விட்டீர்களா?.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam