அதை மட்டும் நம்பி போயிடாதீங்க.. எப்படியிருக்கு வேட்டையன்?.. திரைப்பட விமர்சனம்..!

சமூக நீதி திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. அதனால்தான் சமூகநீதி இயக்குனர்கள் படங்கள் எப்பொழுதுமே இங்கு வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஒரு சமூக நீதி இயக்குனராக மக்கள் மத்தியில் அறியப்படுபவர்தான் இயக்குனர் தா.செ ஞானவேல். ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தனக்கென தனி இடத்தை சினிமாவில் ஞானவேல் பதித்தார்.

அதை மட்டும் நம்பி போயிடாதீங்க

இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு ரஜினியை வைத்து திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ரஜினியை வைத்து அவர் இயக்கிய வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படம் என்பதால் இதில் அமிதாப் பச்சன், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் போன்ற மற்ற மொழிகளை சேர்ந்தவர்களும் நடித்து இருக்கின்றனர்.

இந்த படம் வெளியான முதல் நாளே நல்ல வசூலை பெற துவங்கி இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்னவென்று பார்ப்போம். படத்தின் கதைப்படி கன்னியாகுமரியில் ஒரு டீச்சராக இருந்து வருகிறார் துஷாரா விஜயன். அவர் பள்ளிக்கு சென்று வரும்பொழுது அவரது பள்ளியில் போதை பொருட்களை பதுக்கி வைப்பதை பார்க்கிறார்.

எப்படியிருக்கு வேட்டையன்

இந்த நிலையில் இதை காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். இந்த விஷயம் ரஜினியின் காதுகளுக்கு வரவே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ரஜினி அந்த கடத்தல் கும்பலை பிடிக்கிறார்.

இந்த நிலையில் துஷாரா விஜயன் மேல் படிப்புக்காக சென்னைக்கு செல்கிறார். அங்கு ஒரு அரசு பள்ளியில் பணிபுரிந்து கொண்டு தன்னுடைய மேல் படிப்பை படித்து வருகிறார். அப்பொழுது ஒரு மர்மமான கும்பலால் அவர் கொலை செய்யப்படுகிறார்.

இந்த விஷயம் ரஜினியின் காதுகளுக்கு செல்லவே யார் அந்த கும்பல் என்று கண்டறிய துவங்குகிறார் ரஜினி. அது ஒரு பெரிய நிறுவனத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிறகு இந்த கும்பலை இவர் எப்படி பிடிக்கப் போகிறார் என்பதாக கதை சொல்கிறது.

இந்த படத்தைப் பொறுத்தவரை ஒரு ஜெய் பீம் போலவே ஒரு சிறப்பான சமூக ஊழலை பேசக்கூடிய ஒரு திரைப்படமாகதான் இந்த படமும் இருக்கிறது. ஆனால் ரஜினிக்காக இந்த படத்தில் சில இடங்களில் வளைந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

திரைப்பட விமர்சனம்

கமர்சியல் சினிமாவாக படத்தை மாற்ற வேண்டும் என்று தேவையில்லாத காட்சிகளில் கூட சண்டை காட்சிகளை வைத்திருக்கின்றனர். இதனால் இந்த படம் வேண்டுமென்றே ஒரு ஆக்ஷன் படமாக மாற்றப்பட்டது போல தெரிகிறது. உதாரணத்திற்கு ஜெய் பீம் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஒரு நான்கு சண்டை காட்சிகள் வைத்திருந்தால் எப்படி இருந்தோமோ அந்த மாதிரி இதில் இருக்கிறது என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

ஆனால் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு இந்த படம் திருப்தியாக இருக்கிறது. ஆனால் ஜெய்பீம் போலவே இந்த படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் திருப்தி அளிக்குமா என்பது சந்தேகமே..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version