Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

அஜித்தின் புகைப்படத்தை தமிழக அரசுத்துறை எதற்கு பயன்படுத்தியுள்ளது பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக திகழும் நடிகர் அஜித் ( Ajith ) தற்சமயம் வேர்ல்ட் டூர் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை தமிழ்நாடு காவல் துறை விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்
Ajithkumar

நடிகர் அஜித் தற்சமயம் ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார் இந்த படத்தில் முன்னதாக பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் அவருடன் சேர்ந்து நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பிறகு கதை பிடிக்காத காரணத்தினால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

மேலும் இதனை அடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஏ கே 62 திரைப்படத்தின் அடுத்த இயக்குனர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.

இதனை அடுத்து பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி அவர்கள் நடிகர் அஜித்தை சந்தித்து கதை கூறியிருக்கிறார். அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்திருந்ததுதான் காரணமாக தற்சமயம் அஜித்தை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அஜீத் அவர்கள் தனது கதைக்களத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.ஆதலால் இந்த படம் கிரைம் திரில்லர் மூவியாக எடுக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்தன.

மேலும் அஜித் அவர்கள் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்துவார் என்று மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அந்த டைட்டில் பெயர் விடா முயற்சி.

அஜித்
Ajithkumar

அஜித் எப்பொழுதும் வி வரிசை பெயர்கள் இதுதான் படத்தின் பெயரை வைப்பார். அந்த வகையில் தற்சமயமும் வி வரிசையில் விடா முயற்சி என்று வைத்துள்ளார்.இது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே வலிமை விவேகம் வீரம் விசுவாசம் போன்று வரிசையாக இந்த பெயரில்தான் வைத்துள்ளார்.

ஆதலால் மீண்டும் விடாமுயற்சி என்று வைத்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது. என்று நிறைய அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர் இந்த நிலையில் பலர் அதற்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் விடாமுயற்சியினால் தான் அஜித் இந்த நிலையை அடைந்துள்ளார் ஆதலால் விடா முயற்சி என்ற டைட்டில் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அஜித் வேர்ல்ட் டூர் பயணம் நடத்தி வருகிறார் அதில் நிறைய புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார் அதில் ஒரு புகைப்படத்தை தமிழ்நாடு காவல்துறை அரசு twitter இணையத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் ஹெல்மெட் அணிந்து அனைத்து உபகரணங்களையும் அணிந்து அஜித் அந்த புகைப்படத்தில் உள்ளார்.அதனை தமிழ்நாடு காவல்துறை அரசு இணையத்தில் பகிர்ந்துள்ளது. இவரை போல நாமும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

அஜித்
Ajithkumar

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version