அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

இயக்குனர் பாலு மகேந்திரா, தமிழ் சினிமாவில் அடையாளமாக கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக, தன்னை வெளிப்படுத்தியவர். அவர் மிகச் சிறந்த படங்களை அவர் தமிழ் சினிமாவுக்கு தந்தவர். ஆளுமை மிக்க ஒரு இயக்குனராக, இப்போதும் அவரது படங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

பாலு மகேந்திரா அறிமுகம் மௌனிகா

கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா, டைரக்சனில் வெளியான உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, மௌனிகா அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இன்னும் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மிகச்சிறந்த படைப்பாளி

டைரக்டர் பாலு மகேந்திரா மிகச் சிறந்த படைப்பாளியாக இந்திய சினிமா அளவில், ஒரு மிகச்சிறந்த இயக்குனர். ஆனால், அவரது சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்தவர். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர் சில காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்து அகிலா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். இரண்டாவது மனைவி இருக்கும்போதே, நடிகை மௌனிகாவையும் அவரே திருமணம் செய்து கொண்டார் .

28 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை

இயக்குனர் பாலு மகேந்திரா மீதும், அவரது சினிமா மீதும் காதல் கொண்ட மௌனிகா, பாலு மகேந்திராவுடன் 28 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளார். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருவரும் திடீரென பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு சில ஆண்டுகளில் பாலு மகேந்திராக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், அவர் இறந்தார். இந்நிலையில் சமீபத்தில் பாலுமகேந்திரா குறித்து சில விஷயங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை மௌனிகா.

அவர் எழுதிய கடிதத்தில்…

பாலு மகேந்திரா எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் என்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் திணிக்க விரும்பவில்லை. அதனால் நாம் பிரிந்து விடுவோம் என்று எழுதியிருந்தார்.

அவர் ஆன்மாவை கூட மன்னிக்க முடியாது

என்னை யாராவது ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் அவர் என்னை விட்டு பிரிந்து இருப்பார். அவர் செய்தது மிகப்பெரிய தவறு. என்னால் அவரை மன்னிக்கவே முடியாது. அவர் ஆன்மாவை கூட என்னால் மன்னிக்க முடியாது. இப்போது வரை எந்த காரணம் சொல்லாமல் போய்விட்டார் என்ற வருத்தம் தான் எனக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார் மௌனிகா.

இரண்டு சத்தியங்கள் வாங்கினார்

மேலும் பாலு மகேந்திரா இறப்பதற்கு முன்பு, என்னிடம் இரண்டு சத்தியங்கள் வாங்கினார். ஒன்று நீ தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். இன்னொன்று நான் இறந்த பின்பு இன்னொரு கல்யாணம் நீ செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் உனக்கு பாதுகாப்பு என்றார்.

சத்தியமாக, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. என் மனம் அதற்கு ரெடியாகணும். ரெடியாகாமல் கல்யாணம் செய்வது சரியாகவும் இருக்காது. அதனால் படத்தில் நடிக்கிறேன். ஆனால் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன்.

இதையும் படியுங்கள்: முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?

புருஷனை பங்கு போட்டது தப்பு

அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதே பெரிய விஷயம். இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொள்வது என்பது முடியாத காரியம். இன்னொருத்தருடைய புருஷனை பங்கு போட்டது தப்புதான்.

வேறொருவரை…

ஆனால் அந்த தப்பான வாழ்க்கையை சரியாக நான் வாழ்ந்தேன். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை எல்லாம் கொடுத்தேன். எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவரும் கொடுத்தார். அப்படிப்பட்ட ஒருத்தரை அவரிடத்தில் வேறொருவரை பொருத்தி பார்க்க என்னால் முடியாது.

இதையும் படியுங்கள்: “வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

ஆண் பெண் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அதையும் மீறி வாழ்க்கை இருக்கிறது என்று அந்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால், பாலு மகேந்திராவுடன் நான் சரியாக வாழ்ந்தேன். அவருடன் மரியாதையான வாழ்க்கையை நடத்தினேன் என்று நடிகை மௌனிகா கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version