அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

நடிகை திரிஷா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அதுவும் முன்னணி நடிகையாக இருப்பதோடு இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திரிஷா

திரிஷா துவக்கத்தில் நடித்த சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்போது சியான் விக்ரமுடன் சாமி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இது கடந்த 2003ம் ஆண்டில் நடந்த சம்பவம். சாமி படத்தின் இயக்குநர் ஹரி.

நடிப்புக்கே பெரிய கும்பிடு

சாமி படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் நடிப்பை தொடரலாம். இல்லை என்றால் நடிப்புக்கே பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கி விடலாம் என்றுதான் திரிஷா நினைத்திருக்கிறார்.

ஆனால் சாமி படம் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விக்ரம் சினிமா பயணத்தில் மட்டுமின்றி, திரிஷாவின் சினிமா வாழ்க்கையிலும் சாமி படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

மன்மதன் அம்பு

தொடர்ந்து கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜயுடன் நடித்தார் திரிஷா. அடுத்து கமலுடன் மன்மதன் அம்பு படத்திலும் நடித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார்.

இடையில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில், 96 படத்தில் ஜானகி கேரக்டரிலும், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரிலும் நடித்து, மீண்டும் பழைய இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: தலைமுடி முழுதும் நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் தலைநகரம் பட நடிகை..

14 ஆண்டுகள் கழித்து…

குருவி படத்துக்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் விஜயுடன் நடித்தார். இப்போது அஜீத்குமாருடன் விடாமுயற்சி, மலையாளத்தில் 2 படங்கள், தெலுங்கில் 3 படங்கள், அடுத்து கமலுடன் தக்லைப் என பயங்கர பிஸியாக திரிஷா இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சர்ச்சையான தகவல்கள்

நடிகர் விஜயுடன் அதிக படங்களில் நடித்த நடிகை திரிஷா தான். கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ என 5 படங்களில் நடித்திருக்கிறார். விஜய், திரிஷா இடையே நெருக்கமான நட்பும், உறவும் இருப்பதாக சர்ச்சையான தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மையா எனத் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்: நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

கில்லி படத்துக்கு முன்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை திரிஷாவிடம், விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது திரிஷா, நானும் விஜய்யும் இதுவரை பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். ஆனால் கில்லி படத்துக்கு முன் நாங்கள் அப்படி இல்லை.

அனைவரும் சொல்வது போல, விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்துக்கு பின்புதான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம், என்று கூறியிருக்கிறார் திரிஷா.

அதாவது கில்லி படத்தில் நடிப்பதற்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி நண்பர்களாக இருந்தது இல்ல. அதன்பின்தான் நல்ல நண்பர்களாக மாறினோம் என்று வெளிப்படையாக திரிஷா கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version