அந்த விரலை காட்டி பதிலடி கொடுத்த சமந்தா.. நாகசைதன்யா நிச்சயத்திற்கு எதிரான பதிவா?.

சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த சில நாட்களாகவே இதுதான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்தது. நாகசைதன்யா தெலுங்கில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ஆவார்.

மூன்றாம் தலைமுறை நடிகராக அவரது குடும்பத்தில் இவர் நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டது. ஏனெனில் நடிகை சமந்தாவும் தெலுங்கில் முக்கியமான நடிகையாக அப்போது மாறி இருந்தார்.

நாகசைதன்யா நிச்சயத்திற்கு எதிரான பதிவு

இதனை அடுத்து நாகசைதன்யாவின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. ஆனால் சில வருடங்களே இந்த திருமணம் நீடித்தன. பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இதற்கு பல்வேறு காரணங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பக்கம் பேசப்படுகிறது. மற்றொரு பக்கம் சமந்தாவிற்கு இருந்த நோயை அறிந்து கொண்ட நாகசைதன்யா அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்று பேசப்படுகிறது.

பதிலடி கொடுத்த சமந்தா

இதற்கு நடுவே திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா வேறு நடிகையுடன் உறவில் இருந்தார் என்றும் அது சமந்தாவிற்கு தெரிந்ததால்தான் அவர் நாகசைதன்யாவை விட்டு பிரிந்து விட்டார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே இவர்கள் நிச்சயதார்த்தம் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் சமந்தா. இது பலருக்கும் நெருடலாக இருந்தது. சமந்தா ஏன் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அவரது முன்னாள் கணவர் நிச்சயதார்த்தம் செய்து விட்டார். சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருந்து வருகிறார் என்றெல்லாம் பலவிதமான பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தன.

அந்த விரலை காட்டி பதிவு:

இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய நடுவிரலை காட்டி ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த போட்டோவில்  Now we Are free என்கிற ஒரு பாடலையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார். தற்சமயம் இது சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கி இருக்கிறது.

சமீபத்தில் நாகசைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை கேலிக்கு உள்ளாக்கும் வகையில்தான் சமந்தா இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என்று ஒரு பக்கம் இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதார்த்தமாக சமந்தா பதிவுதான் அது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

தற்சமயம் உடல் நலம் தேறிவரும் சமந்தா நிறைய வெப் சீரிஸ் களிலும் திரைப்படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். இன்னும் சில நாட்களில் பழையபடி சமந்தாவை திரையில் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version