ஜெயம் ரவி & ஆர்த்தி விவாகரத்து..? இந்த நடிகை தான் காரணமா..?

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படம் மூலமாக அறிமுகமான ஜெயம் ரவி அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

முதலில் நடித்த ஜெயம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதல் பாதி முழுவதும் சாஃப்ட்டான கேரக்டராக இருக்கும் ஜெயம் ரவி அடுத்த பாதியில் கொஞ்சம் சண்டை போடும் கதாபாத்திரமாக மாறி இருப்பார்.

ஜெயம் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும் நிறைய வெற்றி தரும் திரைப்படங்களை ஜெயம் ரவியை வைத்து கொடுத்தார். அதேபோல ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பொழுது பெரும்பாலும் ஜாலியான கதாபாத்திரங்கள் உள்ள திரைப்படங்களாகவே நடித்தார்.

விவாகரத்து சர்ச்சை:

ஆனால் இப்பொழுது நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஏற்பட உள்ளதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதற்கு பிறகு ஆர்த்தியின் தாயார் ஜெயம் ரவியை வைத்து நிறைய திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான சைரன் திரைப்படம் கூட அவருடைய தயாரிப்பில் உருவான திரைப்படம்தான்.

இந்த நிலையில் அடுத்து ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் திரைப்படத்தையும் இவர்தான் தயாரிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் விவாகரத்து நடந்தால் அடுத்து ஜெயம் ரவிக்கு இவர் படம் தயாரிப்பாரா என்பதே சந்தேகமாக இருந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் பட விவகாரம்:

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது படத்தில் நடித்த வேறு ஒரு நடிகையுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் ஜெயம் ரவி அவரது மாமியார் தயாரிப்பில் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் தோல்வியை கண்டிருக்கின்றன. இந்த இரு காரணங்களால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் ஆர்த்தி. அதில் காதல் என்பது வார்த்தை இல்லை வாழ்க்கை என்று குறிப்பிடப்பட்டு ஜெயம் திரைப்படத்தின் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் தங்களுக்கு எந்த விவாகரத்தும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆர்த்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version