பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

வனிதா விஜயகுமார் என்றாலே, ரசிகர்களுக்கு அவரது சண்டை போடுவது மாதிரியான ஒரு தோற்றம்தான் மனதுக்குள் வரும். ஏனென்றால் அடாவடி, சண்டை, பிரச்னை, சர்ச்சை என்றே அவர் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி விட்டார் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் உண்மை.

விஜயகுமார்

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற உறவினர் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு கவிதா, அனிதா, அருண்விஜய் என்று 3 பிள்ளைகள் உள்ளனர்.

அடுத்து சினிமாவில் நடித்த காலகட்டத்தில், நடிகை மஞ்சுளாவை காதலித்தார். முதல் மனைவி முத்துக்கண்ணு சம்மதத்துடன் இரண்டாவது மனைவியை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் இருக்கின்றனர்.

வனிதா விஜயகுமார்

ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமார், தனது திருமணம் சார்ந்த சில முடிவுகளை எடுத்த போது அதற்கு விஜயகுமாரும், மஞ்சுளாவும் பெற்றோராக எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்ட வனிதா விஜயகுமார், ஒரு சமயத்தில் சொத்து கேட்டும் அவர்களிடம் பிரச்னை செய்தார். தனது தாய், தந்தை குறித்து மீடியா முன்னிலையில் அவதூறாக பேசி அசிங்கப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்: திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

இதனால் மனம் நொந்து போன மஞ்சுளா, நீ என் மகளே இல்லை என்றும் திட்டிவிட்டார். அந்த அளவுக்கு பெற்றோரின் மனங்களை காயம்படுத்தியவர் வனிதா விஜயகுமார்.

இப்போதும் வனிதா விஜயகுமாரின் மகன், விஜயகுமார் வளர்ப்பில்தான் இருக்கிறார். எனக்கு அம்மாவை விட தாத்தா தான் பிடிக்கும் என்று தாத்தாவின் அன்புக்குரிய பேரனாக விஜயகுமார் வீட்டில் வளர்ந்து வருகிறார்.

அதனால் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையாக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுவராக வனிதா விஜயகுமார் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவரது அலப்பரைகளை யாராலும் மறக்க முடியாது.

பிரியங்கா

சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வனிதாவின் செயலை கண்டு தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வனிதாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற முயற்சி செய்தார் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டை, நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் ஒரு நேர்காணலில் வனிதா விஜயகுமார் கூறியதாவது,

இதையும் படியுங்கள்: திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..

முதல் மனைவியின் குழந்தைகளை டாக்டருக்கு படிக்க வைத்திருக்கும் என்னுடைய அப்பா விஜயகுமார், அவருடைய இரண்டாவது மனைவியான என்னுடைய அம்மா மஞ்சுளாவின் குழந்தைகளை அனைவரையும் நடிகைகளாக தான் மாற்ற முயற்சித்தார்.

சினிமாவில் தள்ளி விட்டார்

எங்கள் மூலம் பணம் பெறுவதை மட்டுமே அவர் குறிக்கோளாக கொண்டிருந்தார் ஏன் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை மருத்துவர்களாகவும் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை சினிமாவிலும் தள்ளிவிட்டார் விஜயகுமார்.

பெத்த மகளையே

சொத்துக்காக, பணத்துக்காக பெண் என்று கூட பார்க்காமல் பெத்த மகளையே வீட்டை விட்டு வெளியே போ எனச் சொன்னாங்க, இந்த கேள்வியை யாராவது விஜயகுமாரிடம் கேட்க முடியுமா என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version