பழைய நடிகைகள்.. 80 வயசை கடந்து இன்னும் இருக்கும் நடிகைகள் பட்டியல்..!

பல ஆண்டுகள் வாழ்வது என்பது மனித குலத்துக்கு எப்போதுமே சவாலாக இருந்து வரும் ஒரு விஷயமாகும். அதுவும் இப்போதைய தலைமுறைக்கு மிக 50 வயது என்பதே பெரிதாக இருக்கிறது. இருந்தாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடித்துவிட்டு இப்போது வரை வாழ்ந்து வரும் நடிகைகள் பலர் உண்டு.

எண்பது வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமா வரலாற்றை தனக்குள் கொண்டு வாழும் முக்கிய பிரபலங்களை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்

102 வயதான  பி.எஸ் சரோஜாதான் இருக்கும் நடிகைகளிலேயே மூத்த நடிகை என்று கூறலாம். இவர் சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி திரைப்படத்தில் நடித்த பெருமைக்குரிய நடிகை ஆவார்

இரண்டாவது நடிகை சௌகார் ஜானகி 92 வயதான சௌகார் ஜானகி சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினிகணேசனுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பார்த்தால் பசி தீரும், புதிய பறவை போன்ற பல படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களாக இருந்திருக்கின்றன.

சரோஜா தேவி:

வயது 86 கடந்த சரோஜாதேவி இப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு பிரபலமாக சரோஜாதேவி இருந்தார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்ற ஒரு நடிகையாக சரோஜாதேவி இருக்கிறார்.

அதேபோல நடிகை வைஜெயந்தி மாலா 91 வயது அடைந்தவராக இருந்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் வாழ்க்கை, தேன்நிலவு இரும்புத்திரை, அதிசய பெண் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை அதேபோல நடிகை காஞ்சனா வயது 85 ஐ கடந்தவராக இருந்து வருகிறார் தமிழ் சினிமாவின் பழைய வரலாற்றை தன்னுள் கொண்ட முக்கிய நடிகைகளில் வரும் ஒருவர்.

நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாக நடித்த நடிகை சாரதா 75 வயதை அடைந்தவராக இருந்து வருகிறார். மிக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த சாரதா பிறகு திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்

விஜயக்குமாரி:

நடிகை விஜயகுமாரி அப்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக இருந்தவர்களில் முக்கியமானவர். மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்த விஜயகுமாரி தமிழின் பெரும் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் தற்சமயம் 88 வயதை அடைந்த விஜயகுமாரி அவரது வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் காந்தா என்கிற மிக முக்கியமான கதபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை எம்.என் ராஜம். அதற்குப் பிறகு தெய்வ பிறவி, பாசவலை என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதிகபட்சம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் இவர் அதிகம் நடித்திருக்கிறார். வின்னர் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்தின் பாட்டியாக நடித்திருப்பார். தற்சமயம் 84 வயதை கடந்தவராக எம்.என் ராஜம் இருக்கிறார்

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் சொற்பமான அளவில் தான் பெண் காமெடி நடிகைகள் இருந்தனர். அப்படி இருந்த நடிகைகளில் நடிகை சச்சு முக்கியமானவர் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலிருந்து நிறைய திரைப்படங்களில் நாகேஷுடன் சேர்ந்து நடித்த இவர் தற்சமயம் 78 வயதை அடைந்திருக்கிறார்

தமிழ் சினிமாவில் அம்மன் படங்களுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்து முதலில் அம்மனாக நடித்த நடிகை கே ஆர் விஜயா. சினிமாவில் நடிகை ஆவதற்கு உடல் அமைப்போ அல்லது முக அழகோ தேவை கிடையாது என்பதை நிரூபித்தவர் கே.ஆர் விஜயா தற்சமயம் 78 வயதை அடைந்தவராக கே ஆர் விஜயா இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version