விக்கி என்னோட இதை பார்த்து பயந்துட்டார்.. நயன்தாரா ஓப்பன் டாக்..!

தமிழகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்கு இப்பொழுது சொந்தக்காரியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவிற்கு முன்பு நடிகை விஜயசாந்திதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

பெரும்பாலும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம்தான் நடிகைகள் இந்த பட்டத்தை பெறுகின்றனர். அதே வகையில்தான் நயன்தாராவும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றார். காதல் வாழ்க்கையை பொறுத்தவரை நயன்தாராவின் காதல் வாழ்க்கை மிகவும் சோகமானதாக அமைந்திருக்கிறது.

நயன்தாரா காதல்:

தமிழ் சினிமாவில் நிறைய ஆண்களை நம்பி காதலித்து பிறகு அவர்களால் ஏமாந்து காதல் தோல்விகளை அதிகமாக கண்டவர் நடிகை நயன்தாரா. இருந்தாலும் அவருக்கு வெற்றியாக அமைந்த ஒரே காதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு இருந்த காதல்தான்.

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளை தேடி வந்த இயக்குனர் ஆவார். நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட அவர் வருவதை பார்க்க முடியும். அப்படி இருக்கும் பொழுது போடா போடி திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன்.

அந்த படம் வெளியான போது பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து அந்த படத்திற்கு கொஞ்சம் மதிப்பு கிடைக்க துவங்கியது. இதனால் விக்னேஷ் சிவனுக்கு திரும்பவும் வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு பிறகுதான் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார்.

நானும் ரவுடிதான் படம்:

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையே மிகச் சிறப்பானதாக இருந்தது. ரவுடி என சொல்லிக் கொள்ளும் கதாநாயகன் ஆனால் அவனுக்கு சண்டை கூட போட தெரியாது என்பது பல நடிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு அந்த படத்தில் நடித்து கொடுத்தார். அதேபோல அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதில் காதம்பரி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் போதுதான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஆரம்பத்தில் நயன்தாராவிடம் இந்த கதாபாத்திரம்  காது கேட்காத கதாபாத்திரம் என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதனை கேட்டதும் அப்படி என்றால் மிகவும் பாவப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் போல என்று நினைத்தார் நயன்தாரா.

மிகவும் சோகமான ஒரு மேக்கப் போட்டுக் கொண்டு பார்ப்பதற்கே பாவமான ஒரு பெண்ணாக வந்து விக்னேஷ் சிவன் முன்பு நின்றார். அதை பார்த்ததும் விக்னேஷ் சிவன் பயந்துவிட்டார். ஏன் இப்படி மேக்கப் போட்டீர்கள் என கேட்ட பொழுது இல்லை காது கேட்காத பெண் எனும் பொழுது பாவமாக இருக்க வேண்டும் அல்லவா? என்று சொல்லி இருக்கிறார் நயன்தாரா. அதற்கு பதில் அளித்த விக்னேஷ் இல்லை படம் முழுக்க இந்த பெண்ணை மிகவும் அழகாக காட்டப் போகிறோம்.

காது கேட்காது என்பதே ஒரு குறையாக இந்த படத்தில் நாம் காட்டப் போவது கிடையாது என்று கூறி நயன்தாராவுக்கு பிறகு மேக்கப் மாற்றி இருக்கிறார் இந்த விஷயத்தை நயன்தாரா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version