இன்றைய ராசிபலன் 04 ஏப்ரல் 2023 செவ்வாய் க்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 04 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை.ஜாதகத்தில் ஒருவருக்கு எத்தகைய கோளாறுகள் இருந்தாலும் அந்த கோளாறுகளை எல்லாம் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கும் பரிகாரங்களை சிறப்பான முறையில் செய்து முடிப்பதின் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

மேலும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நாம் செயல்பட இந்த ஜோதிடம் நமக்கு உறுதுணையாக உள்ளது.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள
28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களுடைய அதிகரித்து இருக்கும். உங்களது தன்னம்பிக்கை குறையும். எனினும் நீங்கள் வெற்றி இடத்தை அடைய உற்சாகமாக முயற்சி செய்வது நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் மதிப்பு மரியாதை உயரும் மேல் அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு பாராட்டுக்கள் வந்து சேரும். புதிய யோசனைகள் மூலம் நீங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்தாலும் அது நடக்காது. எனவே தொழிலில் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதி கடமையை பொறுத்தவரை இந்த குடும்பத் தேவைக்காக நீங்கள் செலவுகள் அதிகம் செய்ய வேண்டும். தேவையற்ற செலவுக்காக இருந்தாலும் கட்டாயம் அதை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.எனவே சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள நாள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் கவனம் செலுத்துவது அவசியம். கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்மை தீமை என்ற கலந்த பலன்கள் ஏற்படும். இன்று நிச்சயமற்ற தன்மை  நிலவுவதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு பொறுமை கட்டாயம் தேவை.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனக்குறைவு அதிகளவு இருக்கும்.மேலும் செயல் திறன் மந்தமாக இருக்கும்.எனவே பணியை செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை செலவு அதிகமாக காணப்படும். பாதுகாப்புக்காக நீங்கள் பணத்தை சேமிக்க கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். உணவு முறையில் கட்டாயம் தேவை.மேலும் முறையான சிகிச்சையால் விரைவில் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று பணிகள் அதிகரித்து இருப்பதால் உங்கள் இலக்குகளை எளிதாக அடைய முயற்சி செய்து குறிப்பிட்ட சமயத்தில் இலக்குகளை அடைந்து விடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இந்த நாள் உள்ளது.

 தொழில்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். பணியில் உங்கள் திறமை மிக நேர்த்தியாக வெளிப்படும். அனைவரும் உங்களது திறமையை பாராட்டுவார்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பண வரவு இன்று அபரிமிதமாக இருக்கும். உங்கள் பணத்தை சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உற்சாகமாக இருக்கக்கூடிய உங்களுக்கு ஆரோக்கியத்தை எந்தவிதமான குறைபாடும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி நண்பர்களில் இன்று உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடுமையாக போராடுவீர்கள். திட்டமிட்டு நம்பிக்கையோடு எதிலும் செயலாற்றுங்கள். அஞ்சாத மனமும், ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இன்று நிறைவேறும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பொறுமையோடு செயல்பட்டு வெற்றிகளை நீங்கள் அடைய வேண்டும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய இன்று உகந்த நாள். எனினும் நீங்கள் யோசித்து உங்கள் பணியை செய்வதின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடிய நாளாக உள்ளது. இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். எனினும் இந்த செலவுகளை நீங்கள் தவிர்க்க முடியாது.எனவே சிக்கனத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. எனவே நீங்கள் கண்களில் பிரச்சனை ஏற்பட்டால் கண் சிகிச்சையை உடனே மேற்கொள்ளுங்கள்.

சிம்மம்

 சிம்ம ராசி அன்பர்களே என்று உங்களுக்கு பொறுமை என்பதே இருக்காது.  இது உங்களுடைய வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.எனவே பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மிதமான வளர்ச்சியை காணப்படுகிறது. பணிகள் அதிகமாக இருக்கும். அதற்காக அதிக நேரத்தை நீங்கள் செலவு செய்ய வேண்டி வரும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களோடு உறவு  நிலை சிறப்பாக நிலையில் இருக்காது.

நிதி நிலைமை பொறுத்த வரை பண குழப்பம் ஏமாற்றத்தையே அளிக்கும்.மேலும் அதிகரிக்கும் பொறுப்புக்கள் காரணமாக உங்கள் அடிப்படைத் தேவைகளை சமாளிப்பதே கடினமாக மாறிவிடும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை தொற்று ஏற்பட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே என்று நீங்கள் அமைதி இன்றி உணர்ச்சிவசப்பட்டு இருக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். எ

இன்று சமநிலையோடு இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் மற்றும் வளர்ச்சி கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை திறமையாக பணிகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.எனவே கூடுதல் கவனம் அவசியம்.மேலும் பணிகள் அதிகமாக இருப்பதால் அதை சுமையாக நீங்கள் உணர்வீர்கள்.

 நிதி நிலையை பொறுத்த வரை இன்று பயணத்தின் போது பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பணத்தை கையாளும்போது கவனம் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் தந்தையின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். நெஞ்செரிச்சல் காரணமாக உங்கள் தந்தை அவதிப்பட நேரிடலாம். எனவே தந்தையின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செழிப்பாக இருப்பதற்காக கடுமையான முயற்சிகள் இறங்குவீர்கள். நல்ல பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டகரமான நாளாக இன்று உங்களுக்கு அமைந்துள்ளது. விரைவாக முடிவெடுத்து இடைவிடாத முயற்சிகள் மூலம் நீங்கள் இதை சாதகமாக்கிக் கொள்ள முடியும். மகிழ்ச்சியான நாள் என்று இருந்தால் அது இந்த நாள் என்று கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு திருப்தி ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கு.ம் எனவே பணியை பொருத்தவரை இன்று அமோகமாக இருக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து இருக்கும். உங்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வந்து சேரும். எனவே அதிகளவு பணம் இன்று கையில் புரளும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்று கூறலாம். யோகா, தியானம் மேற்கொள்வதின் மூலம் மேலும் உங்களது ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் லட்சியங்களை அடைய சாதகமான நாளாக உள்ளது.மேலும் மகிழ்ச்சியான தருணங்கள் இன்று ஏற்படும்.நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் உங்களுக்கு வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. இது உங்களது பணிகளை மிக விரைவில் முடிக்க உதவி செய்யும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை என்று ஸ்திரமான நாள் என்று கூறலாம்.இதன் மூலம் உங்களது சேமிப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.மேலும் தாராளமாக பணப்புழக்கம் இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாள் என்று கூற வேண்டும்.உங்கள் திருப்திகரமான மனநிலை காரணமாக உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தனுசு

 தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுடைய பலன்கள் மிதமாகவே இருக்கும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ஆற்றலை உங்களுக்குள் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதின் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சில சவால்களை சந்திக்க வேண்டி இருப்பதால் எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவது அவசியம். பணியில் ஈடுபாடுடன்  செயல்பட்டால் கட்டாயம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து விடுங்கள்.நீங்கள் கவனமாக பணத்தை சிக்கனமாக செலவு செய்வதின் மூலம் நிதி வளர்ச்சி ஏற்படும். இதன் மூலம் நிதி தடைகளை நீங்கள் தகர்த்து எறியலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தியானம் யோகா மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். முதுகு வலியால் அவதிப்பட நேரிடலாம் எனவே கவனத்தோடு இருக்கவும்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் நீங்கள் பொறுமையோடு, உறுதியோடும் அதனை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில விஷயங்கள் உங்களுக்கு கட்டுப்பாட்டை மீறி நடக்கும். எனவே அமைதியான அணுகுமுறையின் மூலம் எதையும் நீங்கள் கையாளுவது சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை திறமையாக செய்ய முடியாது.மேலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்காது.  அது மட்டும் அல்ல மேல் அதிகாரிகள் உங்களுக்கு கிடக்கு பிடி போடுவார்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டி வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது. கையில் இருக்கும் கையிருப்புகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்ற திருப்திகரமான நாள் இல்லை. முதுகு வலியால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் ஏற்படும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நல்ல வளர்ச்சி உள்ளது. பணிகள் மும்மரமாக செயல்படுவீர்கள்.மேலும் திட்டமிட்டு உங்கள் பணிகளை செயல்படுத்துவதின் மூலம் நன்மைகள் உங்களுக்கு அதிகரித்து கிடைக்கும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதால் மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் தேவைகளை சமாளிக்க சிறிய அளவிலான கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று திருப்திகரமாக உள்ளது. ஆரோக்கியத்தில் எந்த குழப்பமும் இல்லை. எனவே ஆரோகியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்காக நீங்கள் கடுமையான முயற்சிகளை எடுப்பீர்கள். அதன் மூலம் சாதகமாக பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய நாளில் நீங்கள் உங்கள் செயல்களை எச்சரிக்கையோடும், விவேகத்தோடும் செய்து முடிப்பீர்கள். சமயோகித புத்தியின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் நல்ல வளர்ச்சி ஏற்படு.ம் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடின உழைப்புக்கான ஊக்கத்தொகைகள் கிடைக்கும். சலுகைகள் மூலம் கூடுதல் பணங்கள் வந்து சேரும். எனவே நிதியைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அமைதியான மனநிலை காரணமாக இன்று உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே அதைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …