Today Rasi Palan in Tamil : நாளும் கோளும் ஜாதகத்தை நம்புபவர்களுக்கு சாதகமாகவே அமையும். அந்த வகையில் இன்றைய ராசி பலன் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம். இன்றைய தின பலன் பிப்ரவரி 7 – ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள்.
பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் கட்டங்களை பொறுத்தே அவருக்கு ராசி பலன்களை கூறுவது சிறப்பாக இருக்கும். எனினும் பொது பலன்கள் அந்தந்த ராசிக்கு குறிப்பிட்டு அளவு பொருந்தும் என்பதால் இதனைப் பொது பலன் என்று கூறுகிறோம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கக்கூடிய 12 ராசிகளுக்கான பொதுவான பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
இன்று மேஷ ராசி நேயர்கள் அனைவருமே உடல் நிலையில் அதிகளவு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. பயணத்தில் கவனம் அதிகளவு இருப்பது சிறப்பான விஷயமாக இருக்கும். வேலையில் அதிக சுமை உங்களுக்கு இருந்தாலும் பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் எல்லா வேலையும் முடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.
குடும்ப உறுப்பினருக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்கும்போது தான் உங்களால் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு பலப்படும். உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக நீங்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் முறையை பொறுத்தவரை எல்லாம் நன்றாகவே இருக்கும்.
ரிஷபம்
நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள ரிஷப ராசி நேயர்களே நீங்கள் இன்று உங்கள் மூலதனத்தை எளிதாக திரட்ட கூடிய காலகட்டங்கள் உள்ளது.இதில் கொடுத்த கடனை எளிதில் நீங்கள் வசூல் செய்து விடலாம். மேலும் புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் இருந்தால் அதற்கு தேவையான நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.
இன்று செய்யக்கூடிய வேலைகளின் நிமித்தமாக உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் தொடர்பு மூலம் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு உகந்த நாள் என்பதால் எதிர்பாராத லாபம் வந்து சேரும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை தொடர்ந்து சீண்டி வரலாம். எனவே குடும்பத்தில் எச்சரிக்கையாக வார்த்தைகளை விடவும்.
பசு மாடுகளுக்கு கோதுமை மற்றும் வெள்ளம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வேண்டியது அனைத்தும் வந்து சேரும் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது சிறப்பு.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களின் நடத்தை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். பணத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய நீங்கள் வாழ்க்கையை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.
உங்களிடம் இருக்கும் நிதியை கொண்டு போதுமான செயல்பாட்டுகளை செயல்படுத்த முடியாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு அவசியமாக கிடைக்கு.ம் உயர் மட்டத்திலிருந்து நீங்கள் பணிபுரியக்கூடிய பகுதியில் உங்களுக்கு எதிர்ப்புகள் வருவதால் நீங்கள் அமைதி காப்பது மிகவும் முக்கியம்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் உங்கள் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக இருக்கவும் லாபகரமான தொழிலை செய்யவும் பசுக்களுக்கு பச்சை நிற காய்கறிகளை கொடுப்பது நலம் தரும்.
கடகம்
கடக ராசி நேயர்களே கடன் பெற்றிருந்தால் அந்தக் கடனை உடனடியாக திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு அமையும். மன அழுத்தம் ஏற்படும் என்பதால் நீங்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து உங்கள் நேரத்தை சிறிது நேரம் ஆவது சில விட முயற்சி செய்யுங்கள்.
பணியிடத்தில் ஏற்படும் எதிர்ப்பை நீங்கள் விவேகமாகவும், தைரியமாகவும் எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
மன நிம்மதிக்காக எப்போதும் தியானம் செய்வதை முறையாக செய்யுங்கள். ஆரோக்கியத்தை அடைய நீங்கள் உளுந்து கருப்பட்டி கடுகு எண்ணெய் போன்றவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அவசியமாக உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
சிம்மம்
புகைப்பிடிக்கக்கூடிய நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்றால் புகை பிடிப்பதை அவசியம் நீங்கள் நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால் அது உங்கள் ஆரோக்கியத்தை கட்டாயம் பாதிக்கும்.
உங்கள் பணத்தை சரியான முறையில் சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
கருப்பு நிறத்தை நீங்கள் அணிவதால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் குடும்பத்தாருடன் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட கட்டாயம் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே உங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை மனப்பான்மையை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவு உள்ளது.
முதலீடு செய்ய விரும்பினால் எதில் செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக ஆலோசித்து அதில் நீங்கள் செய்ய வேண்டும். வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் போது நீங்கள் மிகவும் கவனத்துடன் அதை சரி செய்ய அணுக வேண்டும்.
பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பணி இடத்திலிருந்து பலரும் உங்களை பாராட்டுவார்கள். வணிகர்கள் உங்கள் தொழிலை விரிவாக்கிக் கொள்ள உகந்த நேரம் இன்று.
ஓய்வு நேரத்தில் ஆக்கபூர்வமான பணிகளில் நீங்கள் ஈடுபடலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
துலாம்
உங்களிடம் என்ன தேவை எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து துலாம் ராசி நேயர்கள் செயல்பட வேண்டும். ஆடம்பரமான செலவுகளில் ஈடுபடக்கூடிய காலகட்டம் என்பதை உணர்ந்து அதற்கு தக்கபடி நீங்கள் நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தேவையற்ற மன அழுத்தத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும். கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டால் புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
வாழ்க்கைத் துணை இடம் அதிக அக்கறை காட்டுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீ லட்சுமி நாராயணனை வழிபடுவது மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மைகள் பல ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதை கண்ணும் கருத்துமாக கவனித்து வரவேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் அதற்கான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
பனி போல உங்களது சங்கடங்கள் மிக விரைவில் கரைந்து போகும் என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு கடவுளை வணங்கி வழிபடுவது உங்களுக்கு சிறப்பை தரும் தொழிலைப் பொறுத்தவரை எல்லாம் சிறப்பாக அமையும்.
சிவப்பு மிளகாய் அதிகளவு தானம் தருவதால் உங்களுக்கு குடும்ப ஒற்றுமை ஓங்கி பொருளாதார மேம்பாடு அடையும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் உங்களுக்கு கட்டாயம் கவனம் தேவை. கவனக்குறைவு காரணமாக பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க இது உதவி செய்யும் வராத கடன்கள் வசூலாகும்.
பணியிடங்களில் அதிக அளவு பேசுவதை தவிர்த்து விட்டு பணியை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில் எதிர்மறையான சூழல் உங்களுக்கு எதிராக உருவாகும்.
ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க அனைவரும் ஒன்றாக இருக்க இறைவ வழிபாடு அவசியம் தேவை.
மகரம்
நோயின் தாக்கத்தில் இருக்கக்கூடிய மகர ராசி நேயர்கள் யாராக இருந்தாலும் இன்று இந்த நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் நிவாரணம் பெற முடியும். மேலும் நீங்கள் சம்பாதித்து இருக்கும் பணத்தை முதலீடு செய்து சேமிப்பதை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்யக்கூடிய நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருங்கள்.
மேலும் அதிகபட்சமாக மனைவியோடு உங்கள் நேரத்தை செலவிடுதல் மிகவும் நல்லது பாக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடும்போது உங்களுக்கு தேவையானது.
கட்டாயம் கிடைக்கும் பொருளாதார நிலையை மேம்படுத்த முடிந்த வரை எல்லோருக்கும் தானம் செய்ய முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் செல்வாக்கு உயர வேண்டும் என்றால் நீங்கள் மனப்பக்குவத்தோடு இருத்தல் அவசியம்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் பேசுவதற்கு ஒரு முன் ஒரு முறை நன்கு யோசித்து பேசுவது மிகவும் அவசியம். உங்களது கருத்துக்கள் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் அமையாமல் இருக்க இது உதவி செய்யும்.
நீங்கள் இன்று அதிக அளவு யாருடைய தயவும் இல்லாமல் சம்பாதிக்க முடியும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் உங்கள் வேலை நிமித்தமாக இருக்கும் போட்டியாளர்கள் பல உங்களைப் பார்த்து வியக்கும் வண்ணம் நீங்கள் இருப்பீர்கள்.
வெள்ளை நிற ஆடைகளை அதிகப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு லாபம் கிட்டும். வணிக நோக்கத்திற்காக பயணங்களை மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகும் அனைத்து விதத்திலும் இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுவது மிகவும் நல்லது.
மீனம்
மீன ராசி நேயர்களே இன்று உங்களது ஆளுமையும் ஆரோக்கியமும் நம்பிக்கையும் பலமாக வெளிப்படக்கூடிய நாளாக இது அமைந்துள்ளது. மேலும் பண முதலீடு மற்றும் சேமிப்பு குறித்து இன்று குடும்ப நபர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நிலை உள்ளது.
வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி தரும் நிலை ஏற்படும் மிகச்சிறந்த நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணத்தை பெற்றிருக்கும் நீங்கள் கட்டாயம் நேர்மறையாக முன்னேறுவதற்கான சரியான நாள் என்று கூறலாம்.
அதிகமாக சம்பாதித்து வைத்திருக்கும் பணம் கைநழுவி போக வாய்ப்புள்ளதால் அதை தக்க விதத்தில் சேமிப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் மற்றபடி இன்றைய நாள் உங்களுக்கு மிக நல்ல நாளாகவே உள்ளது. மன அழுத்தத்தை குறைக்க கட்டாயம் மெடிடேஷன் செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேற்கூரிய பலன்களை அனைத்து ராசி நேயர்களும் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இந்த நாள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமான நாளாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
ஜாதகத்தை எந்த அளவு நாம் நம்புகிறோமோ அந்த அளவு உங்கள் உழைப்பின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
இதில் தெய்வத்தின் அனுகூலத்தாலும் உங்களது முயற்சியாலும் நீங்கள் மென்மேலும் உயர உங்களது கிரகக்கூறுகள் எப்படி உள்ளது என்பதை அறிந்து செயல்பட்டால் வெற்றி உங்கள் காலடியில் எப்போது இருக்கும்.