இன்றைய ராசிபலன் 07 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 07 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை.
ஜோதிடர்கள் கூறும் பலன்களை அறிந்து அதற்கு தக்கவாறு செயல்களை செய்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எடுத்த காரியம் தங்கு தடை இன்றி வெற்றி பெற அவர்கள் கூறிய பரிகாரத்தை செய்வதின் மூலம் கட்டாய வெற்றி இலக்குகளை எளிதில் அடைய முடியும்.

எனவே ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களை கேட்டு அதற்கு தக்கவாறு தடுப்பது மிகவும் நல்லது.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான சாதகமான நாள் என்று கூறலாம். உங்கள் கடின உழைப்பின் மூலம் எல்லாமே சாத்தியமாக கூடிய அமைப்புகள் உள்ளது. எனவே இன்றைய நாள் உங்களது நாள் என்று தான் கூற வேண்டும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் திறமையோடு பணி ஆற்றுவீர்கள்.மேலும் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் சகப் பணியாளர்களுடன் நல்லுறவோடு இருப்பீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணவரவு எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும். எனவே நிதி நிலைமையை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 ஆரோக்கியமும் இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் தியானம் மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று மனக்குழப்பத்தோடு நீங்கள் இருப்பீர்கள். இதனால் ஆரோக்கியமற்ற மனநிலை உங்களுடைய காணப்படும். வேதனையோடு எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் முடிக்க முற்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் இசை கேட்பதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் சில சவால்கள் நிறைந்திருக்கும்.நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே உங்கள் செயல் திறன் வெளிப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைவாகவே இருக்கும். உங்களுக்கு பிரியமான ஒருவரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணத்தை செலவு செய்வது கட்டாயமாகும். எனவே நீங்கள் அதற்காக தயங்க வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியத்தில் அவசியம் கவனத்தை செலுத்த வேண்டும். செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று வருத்தங்களை ஒதுக்கி வைத்து அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றிக்கான முயற்சியை எடுக்க வேண்டும். அதில் தடுமாற்றங்கள் வேண்டாம்.எனவே உங்கள் முயற்சியை சற்று அதிகப்படுத்துங்கள்.அதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை செயலில்  அதிருப்தி மட்டுமே காணப்படும்.நீங்கள் அதிக பணிகளை கையாள முறையாக திட்டமிடுவது அவசியமான ஒன்றாகும். எனவே தொழிலில் கவனத்தை செலுத்துங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய நாள் என்று கூறலாம். கையில் இருக்கும் சேமிப்புகள் கரையும். தாயாரின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே திட்டமிட்டு செலவுகளை செய்யவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாள் இல்லை. பல் வலியால் அவதிப்பட நேரிடலாம்.அதற்கு  தகுந்த சிகிச்சையை நீங்கள் மேற்கொள்வது மிகவும் நல்லது ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று சிறிய முயற்சியை நீங்கள் செய்வதின் மூலம் பெரிய விஷயங்களை சாதிக்கக்கூடிய நிலை உள்ளது.மேலும் இன்று நீங்கள் உங்கள் நம்பிக்கையை அதிகரித்து விடுங்கள். கட்டாய வெற்றிகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.அதனை சரியான முறையில் அதை நீங்கள் பயன்படுத்துங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை முக்கிய சந்திப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு உங்கள் கருத்து மற்றும் உங்கள் செயலை வியந்து பார்ப்பார்கள். தகவல் பரிமாற்றம் சாதகமாக அமையும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை உங்கள் கடினமான உழைப்பு மற்றும் முயற்சிக்கு ஏற்ற பணவரவு என்று இருக்கும். புதிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முற்படுவீர்கள். ஆரோக்கியமான நாளாக உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சி அதிகரித்து இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் ஸ்திறமாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றிக்கான நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆதரவையும், திருப்தியையும் தரும். எனவே இறை நம்பிக்கையில் உங்கள் மனதை செலுத்துவது நன்மை அளிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மேல் அதிகாரிகளுடன் நல் உறவு இருக்காது. சிலரால் உங்களுக்கு தொல்லைகள் அதிகளவு ஏற்படும். இது உங்களுக்கும் மேலும் கவலையை தரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று தேவையற்ற செலவுகள் அதிகளவு காணப்படும். இதனால் உங்கள் பணம் விரயமாகும். எனவே சிக்கனமாக செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோல் சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படும்.நீங்கள் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை  தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று பதட்டப்படாமல் சமநிலையோடு இருக்க பழகிக் கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை நம்பிக்கையோடு சமாளிக்க முயற்சி செய்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிக அளவு பணி இருப்பதால் குறித்த நேரத்தில் உங்கள் வேலைகளை முடிக்க முடியாது. சக பணியாளர்களுடன் நல் உறவை பேண முடியாது. இன்று புதிய சந்திப்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள முற்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்த அளவை காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிக செலவுகள் மூலம் உங்களுக்கு நிம்மதி இழக்க வாய்ப்புகள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று மிதமான ஆரோக்கியத்தை கொண்டுள்ள நாள் என்று கூறலாம். கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கக்கூடிய நாளாக அமைந்துள்ளது.நீங்கள் சூழ்நிலைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தியானம் மட்டுமே இன்று உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். எனவே நம்பிக்கையோடு இறைவழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துங்கள்.

 தொழிற்சாலத்தை பொருத்தவரை அதிக பணிகள் காணப்படும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க சரியான திட்டமிடுதல் அவசியம் என்பதை புரிந்து கொண்டு பணிகளில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதால் உங்கள் பணத்தை கையாளும்போது கவனத்தோடு கையாளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தலைவலி, கை, கால் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அமைதியான போக்கும் இருந்தால் மட்டுமே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய நாள் உறுதியான முடிவுகளை நீங்கள் நிச்சயமாக எடுக்கலாம். கடினமான பணிகளை கூட எளிதாக முடித்து விடக்கூடிய ஆற்றல் உங்களிடம் மேலோங்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எனவே இது உங்களுடைய நாள் எனக் கூறலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் உங்களது திறமைகள் பல சென்று வெளிப்படும். இதனால் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாள். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். வங்கி கையிருப்பு அதிகமாகும். பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் ஆற்றல் அதிகரித்திருப்பதால் மனம் உறுதியும் கூடியிருக்கும். இதனால் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று மகிழ்ச்சியான நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்படும் உங்கள் முன்னேற்றத்திற்காக நீங்கள் செலவு செய்தீர்கள். மேலும் மென்மையான உங்களது பேச்சு வெற்றிக்கு வழி வகுக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிவயிடை சூழல் மிக நல்ல முறையில் சாதகமாக உள்ளதால் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். வேலை தொடர்பாக நீங்கள் பயணம் மேற்கொண்டால் அது உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமாக இருக்கும் .எனினும் சிறிய அளவு கடன் வாங்கக் கூடிய யோகம் என்றுமுண்டு. பணப்புழக்கம் அதிக அளவு  இன்று காணப்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆற்றலும் மன உறுதியும் அதிகரித்திருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று கோயிலுக்கு சென்று சம்பிரதாய முறைப்படி வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். சில நாட்களுக்கு அதை தள்ளி போட்டு விடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகமாக இருக்கும். எதையும் முறையாக திட்டமிட்டு செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் மட்டுமே உங்களால் பணிகளை எளிதாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை  செலவுகள் அதிகரித்து இருக்கக்கூடிய நாள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவு கடனை வாங்கி அதை செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து விடுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று நீங்கள் கவலையோடு இருப்பீர்கள். உங்களால் சிறப்பான முறையில் செயலாற்ற முடியாது. உங்கள் செயல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதின் மூலமே இன்று ஓரளவு உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை தன்னம்பிக்கை குறைந்து இருப்பதால் பணிகளை குறித்த நேரத்தில் சிறப்பாக முடிக்க முடியாது. எனவே திட்டமிட்டு செயல்பட முயற்சி செய்யவும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சேமிப்பது கடினம் என்பதை உணர்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளதால் மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்தின் மூலம் நீங்கள் உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மீனம்

மீன ராசி  நண்பர்களே உங்களது அர்ப்பணிப்பு மூலம் முன்னேற்றகரமான பலன்கள் ஏற்படும்.மேலும் முயற்சி சிறப்பாக இருக்கும். உங்கள் திறமைக்கான புகழ் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும் .உங்களில் இடையே மறைந்து இருக்கக்கூடிய ஆற்றல் அதிகளவு வெளிப்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை திடமான முயற்சியின் மூலம் நீங்கள் சாதகமான பலன்களை பெறலாம். உங்கள் திறமை மற்றும் தகுதி உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்திட்டு தருவதோடு பணிபுரியும் இடத்தில் பாராட்டுதல்களையும் பெற்று தரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக வளர்ச்சி உள்ள நாளாக இன்றைய நாள் உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். எனவே நிதியை பற்றி அச்சம் தேவையில்லை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியம் இன்று சிறப்பாக உள்ளது. மன உறுதி காரணமாகவும் திடத்தன்மையின் காரணமாகவும் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக உயரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …