இன்றைய ராசிபலன் – 09 பிப்ரவரி 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்று  09.02.2023 வியாழக்கிழமை. இதில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

எதிர்காலத்தை ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்வதினால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது. மருத்துவத்துறையில் எப்படி வரும் முன் காப்பது அவசியம் என்பதை நாம்  உணர்ந்து செயல்படுகிறோமோ அதுபோலத்தான் மனிதன் பிறந்த உடனே அவன் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கின்ற ஜாதகத்தைக் கொண்டு அவனது எதிர்காலம் பற்றிய விஷயங்களை மிக எளிதில் அறிந்துகொண்டு அதன் மூலம் திட்டமிடுவதால் வருகின்ற அசுப பலன்களை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும்.

மேலும் அதற்கான பரிகாரங்களை செய்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனால் ஜாதகம் பார்ப்பது மூலம் நமக்கு ஆயிரம் யானை பலம் கிடைக்கும் என்று கூறலாம்.இதன்மூலம் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க கூடிய உத்வேகம் நமக்கு கிடைக்கும்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்று தான் கூற வேண்டும். எனினும் உங்களுக்கு பணிகள் கடுமையாக இருக்கும் என்றாலும் அந்த பணிகளை நீங்கள் எளிதில் முடிக்க கூடிய ஆற்றலை பெறக்கூடிய நாளாக இன்றைய நாள் விளங்கும்.

 அதுமட்டுமல்லாமல் முக்கியமான முடிவுகளை இந்த நாளில் எடுப்பதன் மூலம் உங்களுக்கு அதிக அளவு ஆதாயம் கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை திட்டமிட்டு நீங்கள் பணிகளை செய்து முடிப்பதின் மூலம் உங்கள் திறமை எல்லோருக்கும் பளிச்சென்று வெளிப்படும்.

 உங்களோடு போட்டியிடும் சக பணியாளர்களை நீங்கள் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வருவீர்கள்.நிதி நிலைமையை பொறுத்தவரை என்று பணப்புழக்கம் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு சந்தோசம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் திருப்திகரமான நிலை பணப்புழக்கத்தில் இருக்கும்.

 உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு ஆற்றலோடு இருப்பீர்கள்.எனவே ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறையும் இந்த நாளில் உங்களுக்கு இல்லை.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் உங்களை சுயமாக வளர்த்திக் கொள்ள உகந்த நாளாக இருக்கும். எனவே சுய வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் நீங்கள் இறங்கி கலை கட்டலாம். இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது.

 நெருங்கிய நண்பர்கள் கூட உங்களுக்கு துரோகம் செய்யக்கூடிய நிலை நிலவுவதால் உங்கள் முடிவுகளை இன்று தள்ளிப் போடவும். பணியிடங்களில் உங்களுக்கு சலிப்பு சோர்வு ஏற்படும்.

 எனவே குறிப்பிட்ட நேரத்துக்குள் எந்த ஒரு பணியையும் உங்களால் செய்து முடிக்க முடியாது. நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுடைய அஜாக்கிரதை தன்மையால் பண நஷ்டம் ஏற்படுவதற்கான பல வாய்ப்புகள் உள்ளது.

 எனவே கவனமாக பணத்தை கையாளுவது அவசியம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் கண்களில் சில கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 மேலும் கண் எரிச்சல் ஏற்படும் உன்னை எச்சரிக்கையாக இருந்து அவற்றை நீங்கள் முன்னரே செய்து கொள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.

மிதுனம்

இன்றைய தினம் ஆன்மீக விஷயங்களில் அதிக அளவு ஈடுபாடு கொள்ளக்கூடிய மிதுன ராசி நேயர்களுக்கு இன்று பிரார்த்தனைகள் செய்வதின் மூலம் பலாபலன் அதிகளவு கிடைக்கும்.

 மேலும் நீங்கள் இசை பிரியராக மாறி அதிகளவு இசையை கேட்க தோன்றும். ஆன்மீகத்தில் லயிப்பது தான் இன்று உங்களுக்கு சிறந்த வழியாகவும் உங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய நிலையையும் கொடுக்கும்.

 எனவே ஆன்மீகத்தில் உங்களது புத்தியை செலுத்தவும். தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் கடுமையான வேலை சுமை உங்களுக்கு அதிகரிக்கும் விழிப்புணர்வுடன் எதனையும் கவனமாக செயல்ப செய்வதின் மூலம் தான் உங்களுக்கு வெற்றி கிட்டும்.

 உங்கள் செயல் திறனை மேம்படுத்த நீங்கள் கடவுளை தியானித்துக் கொள்ளுங்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைவதால் செலவுகள் அதிகரிக்கும்.

 இது உங்களுக்கும் மென்மேலும் கவலையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. தோலில் எரிச்சல் ஏற்படும் எனவே எண்ணெய் பதட்டங்கள் உண்பதை தவிர்த்து விடுங்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று உங்கள் திறமையான தொடர்புகள் மூலம் நல்ல பலன்களை காண முடியும். அது மட்டுமல்லாமல் ஆன்மீகத்தில் ஈடுபடுவதோடு மந்திரங்களை கூறுவதின் மூலம் உங்களுக்கு சிறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 எனவே மந்திரங்களை உச்சரிப்பது ஆன்மீக சொற்கள் சொற்பொழிவுகளை கேட்பதை இன்று கட்டாயம் செய்யுங்கள்.இதனால் உங்களுக்கு நல்ல நிலை ஏற்படும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி இடங்களில் முன்னேற்றமான நிலை நிலவும்.எனினும் கடினமாக உழைப்பதின் மூலமே நீங்கள் முன்னேற முடியும். மேல் அதிகாரியின் ஆதரவு இன்று கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

 பணப்புழக்கத்தை பொறுத்தவரை இன்று திருப்திகரமாக இருக்கும் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக நீங்கள் பயன்படுத்துவீர்கள். அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தோடு இந்த நாள் சிறப்பான நாளாக உங்களுக்கு அமையும் ஆற்றலோடு எதிலும் செயல்படுவீர்கள்.

சிம்மம்

கடுமையான சவால்களை எதிர்நோக்கி இருக்கும் சிம்ம ராசி நேயர்களே இன்று உங்கள் திறமையால் மட்டுமே அந்த சவால்களை நீங்கள் சரியாக கையாள முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 ஆன்மீக ஈடுபாடு மட்டும்தான் உங்களுக்கு ஆறுதல் தரும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொறுத்தவரை அதிக பணிச்சுமை இருக்கும்.

 சில சமயம் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. தேவையற்ற மருத்துவச் செலவுகளால் பண விரயம் ஏற்படும்.

நீங்கள் அதிகளவு சிலவற்றைப் பற்றி  சிந்திப்பதால் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் எதிலும் அமைதியாக நீங்கள் நடந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு அவ்வளவு நல்ல நாளாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் கவலைகளுக்கு நீங்கள் அதிகளவு ஆளாக கூடிய நாளாக இருப்பதால் எந்த ஒரு பணியையும் உங்களால் சகஜமான முறையில் செய்ய முடியாது.

 மேலும் எதையும் சகஜமான முறையில் அணுக முடியாத உங்களுக்கு தன்னம்பிக்கை அவசியம் தேவை. தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் பணியில் மந்தமான சூழ்நிலையே நிலவும்.

எனவே திட்டமிட்டு எதையும் செயல்படுத்த நீங்கள் விழிப்புணர்வோடு தன்னம்பிக்கையோடு செயல்படுவது நலம் பயர்க்கும். பணத்தைப் பொறுத்தவரை அதிக செலவுகள் செய்ய வேண்டிய நாளான இன்று  பொறுப்புடன் நடப்பது மிகவும் நல்லது.

இல்லையெனில் கட்டாயம் கடன் வாங்க கூடிய சூழ்நிலை உங்களுக்கு உருவாகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். எனவே உணவு விஷயத்தில் கட்டாயம் கட்டுப்பாடுகளை பின்பற்றவும்.

துலாம்

 இன்றைய தினம் துலாம் ராசி நேயர்கள் எல்லா விஷயங்களிலும் கட்டாயமாக பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. மனதில் குழப்பத்திற்கு நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. என்ன செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து அதன் பின் தான் செயலில் இறங்க வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை எவ்வளவு எளிய பணி எனிலும் அதை செய்து முடிக்க உங்களுக்கு பல தடைகள் ஏற்படும். அதை கடந்து வருவது சற்று சிரமம் தான் எனினும் சக பணியாளர்களுடன் நீங்கள் நல்ல உறவு கொண்டால் மட்டுமே காரியத்தை சாதிக்க முடியும்.

 இல்லையென்றால் அவர்களிடையே நல்லுறவை உங்களால் பேணிப் பாதுகாக்க முடியாது. இதன் நிமித்தமாக பணிகள் தடைபடலாம். நிதி நிலைமை பொறுத்த வரை இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். செலவு செய்யும் பழக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாத நாளாக அமையும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று இடர்பாடுகள் ஏற்படும் முதுகு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருப்பதால் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும். நல்ல பலன்கள் அதிக அளவு உங்களுக்கு உள்ளது. எனினும் அனைவரிடமும் சுமுகமாக பழகுவது நன்மை தரும்.

 நீங்கள் வாழ்க்கையில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை உணரக்கூடிய காலகட்டம் அமையும். தொழிலைப் பொறுத்தவரை கடின உழைப்பு காரணமாக நட்பெயரை பெறக்கூடிய நீங்கள் எந்த பணியையும் மிகத் திறமையான முறையில் செய்து நல்ல பெயரை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமாக இருக்கும். கணிசமான அளவு நீங்கள் சேமிப்புத் தொகையை அதிகரிக்க கூடிய நாளாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த விதமான குழப்பமும் இல்லை.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது மிகவும் தவறு. இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாள் அல்ல. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

 எந்தவிதமான செயல்களிலும் இன்று ஈடுபட வேண்டாம். தொழிலைப் பொறுத்தமட்டில் முன்னேற்றம் என்பது கிடையாது. கவனக்குறைவு காரணமாக பல தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 எனவே பணியிடத்தில் கவனம் தேவை நிதிநிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக ஏற்படும். இதனால் பணத்தை இழந்து கவலை ஏற்படும். பதட்டம் உங்களிடம் அதிகமாக காணப்படுவதால் ஆரோக்கியத்தில் சற்று சுணக்கம் இருக்கும்.

 எனவே எதையும் அமைதியாக இருந்து சாதித்து உங்கள் ஆரோக்கியத்தை தேட முயற்சி செய்யுங்கள்.

மகரம்

மகர ராசியின் நேயர்களுக்கும் இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாள் அல்ல சிறந்த பலன்கள் கிடைக்காது. தைரியத்தை இழந்து காணப்படும் நீங்கள் எதிலும் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் செயல்பட்டால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு சங்கடமில்லாத நாளாக இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர்களுடன் சரியான முறையில் உறவு வைத்திருந்தாலும் அது திருப்திகரமாக இருக்காது. எனவே நிலைமையை கருத்தில் கொண்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வளர்ச்சி திருப்திகரமாக இல்லை என்பதால் பண செலவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது. அதுபோலவே உங்கள் ஆரோக்கியமும் சீராக இருக்காது. முறையற்ற உணவுகளை உண்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி உண்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை எனவே பொறுமையை அவசியம் கையாள வேண்டும். குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் நடக்கக்கூடிய காரியம் எனினும் அதற்காக நீங்கள் மனக்கெட வேண்டியது அவசியமாக உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை பணிகள் அதிகமாக இருக்கும் திறமையாக பணியாற்ற நீங்கள் திட்டமிடுதல் அவசியமான ஒன்றாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மோசமான நாள் கூடுதல் பண செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சேமிப்பு கரையும்.

 ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை தேவை கால், தொடை போன்ற பகுதிகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் முறையான சிகிச்சையை உடனே மேற்கொள்ளுங்கள்.

மீனம்

எல்லோரிடமும் பாசமாக பழகக்கூடிய மீன ராசி நேயர்கள் இன்று உங்கள் முயற்சியால் வெற்றியை பெறக்கூடிய நாள் என்று கூறலாம். விட்டுக் கொடுத்துப் போகும் அணுகு முறையின் காரணமாக நல்ல பலாபலன்கள் உங்களை வந்து சேரும்.

 அதுமட்டுமல்லாமல் நண்பர்கள் மூலமும் அண்டை அயலார் மூலமும் உங்களுக்கு நல்லது நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் அவர்களின் நல் உணர்வு உறவை பேணுவது நல்லது.

 பணியிடத்தை பொருத்தவரை உங்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை நிலவுவதால் நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். சக பணியாளர்களும் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கக்கூடிய நிலை இன்று உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமாக இருக்கும் கணிசமான தொகை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். ஆரோக்கியம் அதிகளவு இருக்கும். ஆற்றலுடன் உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்கள் பேணுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam