இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை. நல்ல, நல்ல செயல்களை நீங்கள் மனதால் நினைத்தாலே உங்களுடைய நேர்மறை ஆற்றல் அதிகரித்து உங்களுக்கு நல்லதே நடக்கும். உங்கள் ஜாதகத்தில் எத்தகைய கிரகங்களின் ஆதிக்கம் இருந்தாலும், அவர்களை திருப்திப்படுத்துவதின் மூலம் நீங்கள் எண்ணற்ற பலன்களை பெற முடியும்.

எனவே ஜாதகத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் உங்களுக்கு ஏற்படும் இடர்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதோடு அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரங்களையும் செய்து பலன் பெறலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் ஆக்கபூர்வமாக செயல்படுவதின் மூலம் இந்த நாள் சிறந்த நாளாக இருக்கும்.நீங்கள் புத்துணர்ச்சியோடும் உறுதியோடும் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு வந்து சேரும். இதில் உங்களுக்கு சாதகமான பலன்களே கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கு.ம் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படும் நீங்கள் உறுதியாக உங்கள் பணிகளில் திறமையாக செயல்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பண தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் சேமிப்பு பன்மடங்கு உயரும். எனவே பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று ஆரோக்கியத்தோடு இருக்கக்கூடிய நீங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சீர் கேட்டையும் சந்திக்க மாட்டீர்கள் எனவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிகச் சிறப்பான நாள் என்று கூறலாம். உங்கள் கனவுகளும், விருப்பங்களும் நிறைவேற கூடிய நாள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை ஆற்றலோடு செயல்பட்டு பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை உங்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மனநிறைவைத் தரும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று கண்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் முதுகு வலியும் வந்து போகும். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களது அணுகு முறையில் உறுதியும், பொறுமையும், அவசியம் தேவை. எதிலும் வேகமாக செயல்படுவதை தவிர்த்து விடுங்கள். சிறப்பான திட்டமிடுதல் மூலம் நல்ல நல்ல பலன்களை உங்களால் பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அமைதியாக இருக்க வேண்டும். எதிலும் தலையிடாமல் இருப்பதும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதும் உங்களுக்கு நன்மையை தரும். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் திறமையை நீங்கள் கட்டாயம் நிரூபிப்பீர்கள். உற்சாகமாக உங்கள் மனநிலையை வைத்துக் கொள்ளுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நிதி நிலைமையை கண்காணிப்பதின் மூலம் உங்களுக்கு ஸ்திரமான பணம் கிடைக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிது ஆரோக்கியம் குறைவாக இருக்கும். எனவே நல்ல முறையில் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நம்பிக்கை இருப்பதோடு மட்டுமல்லாமல் உறுதியும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நாள் உங்களுக்கு சாதகமான நாள் இல்லை, என்றாலும் நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்வதின் மூலம் உங்களுடைய ஏற்படுகின்ற எதிர்மறை எண்ணங்களை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை படிப்படியாக பணிகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். மேலும்அதிக அளவு பணிகள் இருப்பதால் அதை திட்டமிட்டு முடிக்கக்கூடிய திட்டமிடுதலை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணியின் மூலம் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் பணத்தை சேமிக்க கூடிய நிலை ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறை இருக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இனிப்பு உணவுகளை சாப்பிடுவதின் மூலம் பற்களில் வலி ஏற்படலாம். எனவே இனிப்பு உணர்வை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து பாடத்தை நீங்களே கற்றுக் கொள்ளலாம். இதனால் நீங்கள் வெற்றியாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சிறந்த திட்டமிடுதல் அவசியமான ஒன்று. அப்போதுதான் உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிக்க முடியும். பணியிடச் சூழல் அவ்வளவு சுமூகமாக இல்லை.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சுமாரான நாளாகவே உள்ளது. காப்பீடு போன்ற வகையில் எதிர்பாராத அளவு பண வரவு வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உடற்பயிற்சி தியானம் மேற்கொள்வது அவசியமாகும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் எனினும் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு திட்டமிடுதல் மிகவும் அவசியமான ஒன்று. எந்த பணியை செய்யும் போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். பிரார்த்தனைகள் செய்வதின் மூலம் நல்ல பலன்கள் கிட்டும்.

 பணிவிடச் சூழலைப் பொறுத்தவரை இன்று சிறந்த பலன்களை நீங்கள் பெற வேண்டுமானால் கட்டாயம் திட்டமிட்டு பணிபுரிய வேண்டும். உங்கள் முயற்சிகளில் நேர்மை இருப்பது அவசியமான ஒன்றாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் குடும்பத்திற்காக பண செலவு செய்ய நேரிடலாம். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி இன்மை ஏற்படும். செலவுகள் அதிகமாக உள்ளதால் உங்களுக்கு இது கஷ்டத்தை தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டாம். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே என்று நீங்கள் தைரியம் மற்றும் உறுதியாக இருப்பதின் மூலம் வெற்றிகள் வந்து சேரும். நீங்கள் செய்யும் செயல்கள் நம்பிக்கையோடு செய்யுங்கள். அமைதியாக இருக்க இசையை கேட்பது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகள் அதிகளவு காணப்படும். உங்கள் பணிகளை எப்படி கையாளுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டும். இதன் மூலம் உங்கள் பண இழப்பை தடுக்க முடியும். எனவே நிதி நிலைமையில் நீங்கள் அக்கறை காட்டுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டத்தை தள்ளிப் போடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறந்த முறையில் பராமரிக்கப்படும். தலைவலி மற்றும் கை கால்கள் வலி செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கவனத்தோடு இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்றைய நாள் முழு அளவிலான அனுகூலமும் உங்களுக்கு கிடைக்காத நாளாக உள்ளது. உங்களுக்கு உரிய பலன்கள் சற்று தாமதமாகத்தான் வந்து சேரும்.எனவே அர்ப்பணிப்பு உணர்வோடு நீங்கள் எல்லாவற்றையும் கையாளுவது அவசியமாகும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கடைசி நிமிடத்தில் கூட உங்களுக்கு தடங்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பதட்டமில்லாமல் பணியை செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகரித்து இருக்கும். எனினும் பணவரவு ஒரு பக்கம் வந்து சேரும். பணத்தை பயனுள்ள நோக்கத்திற்காக செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே எண்ணெய் பதார்த்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்கள் ஆற்றல் அதிகளவு உங்களுடைய காணப்படும். கடினமான பணிகளை கூட நீங்கள் எளிதாக செய்து முடித்து விடுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உரிய நாள் என்று கூறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய மயில்களை நீங்கள் எட்டுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். நீங்கள் பணிகளை கையாளும் விதத்தை பார்த்து அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பணப்புழக்கம் காணப்படும்.மேலும் உங்களுக்கு சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குறைபாடும் இல்லை. பொதுவாக இன்று சிறப்பான நாள் என்பதால் ஆற்றலோடு இருக்கும் உங்களது ஆரோக்கியமும் அதிகரித்து இருக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நீங்கள் போட்ட நீண்ட கால திட்டங்கள் நிறைவேற கூடிய அமைப்பு உள்ளது. வாழ்வின் அனைத்து விதமான சௌவுரியங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் மகிழ்ச்சியும், திருப்தியும் காணப்படும். உங்கள் பணிகள் உற்சாகத்தோடு இருப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு பணியை குறித்த நேரத்தில் முடிக்க உதவி செய்யும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்காக உங்கள் பலன்களை செலவு செய்வீர்கள். மகிழ்ச்சியோடு இருக்கும் உங்களுக்கு இந்த செலவின் மூலம் திருப்தி ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாகவும், ஸ்திரமாகவும் இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம். பதட்டத்தை மட்டும் தவிர்த்து விட்டால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று அமைதியாகவும், பொறுமையாகவும் நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தேவையற்ற ஏமாற்ற உணர்வுகளை தவிர்த்து விடுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சீரும் சிறப்புமாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் நீங்கள் நிஜமாகவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.மேலும் பணியில் கவனமாக செயல்படுவதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக காணப்படும். எனினும் உங்கள் பணத்தை திறமையாக கையாளுவதின் மூலம் சேமிக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று பதட்டத்தோடு இருக்கும்.இதனால் உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பதட்டத்தை தவிர்த்து விட்டால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று கவனமாகவும், சாதுரியமாகவும் உங்கள் செயல்களை செய்ய வேண்டும். சின்ன சின்ன கவன சிதறல்கள் ஏற்பட உள்ள ஏற்பட்டால் அதன்மூலம் தவறுகள் நடக்கலாம். எனவே கவனத்தோடு இருக்கவும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் வந்து சேராது.எனவே மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் விரைவில் பாராட்டை பெற முடியும். உங்கள் பணிகளின் தரத்தை எதிர்மறை எண்ணங்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை அதிகரிக்கும் செலவுகளைக் கொண்டு மன வருத்தப்பட வேண்டாம். பணம் பயனுள்ள வகையில் செலவாகும். எனவே கவலை வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை யோகா தியானம் மேற்கொள்வது சிறப்பாகும். பதட்டம் காரணமாக தொடைகளில் வலிகள் ஏற்படும் எனவே பதக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …