Today Rasi Palan in Tamil : மனிதன் பிறந்த நேரத்தை வைத்து கணிக்கின்ற ஜாதகத்தைக் கொண்டு அவரது ஆயுள் முழுவதும் ஏற்படுகின்ற சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்து கொள்வதோடு அசுப பலன்களுக்கு தேவையான பரிகாரங்களையும் செய்து வருகின்ற இடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகின்ற அற்புதமான ஜோதிடத்தை தொன்று தொற்று நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்றைய தின ராசிபலன் பிப்ரவரி 10- ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களது புதிய முயற்சிகளால் உங்களுக்கு உகந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத சில பலன்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
இந்த நாள் இனிய நாளாக இருப்பதால் நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். மேலும் தொழிலைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளை மிக எளிதில் முடித்து நல்ல பெயர்களை தரக்கூடிய நிலை உள்ளது.
நிதி நிலையை பொறுத்த வரை இன்று பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ள நாள்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள் உடல்நலத்தில் எந்தவிதமான கோளாறுகளும் இன்று இல்லை.
ரிஷபம்
ரிஷப ராசியை பொறுத்தவரை இன்றைய தினம் சுமாரான நாளாக தான் உங்களுக்கு உள்ளது. எனவே இன்று உங்களிடம் காணப்படும் அவநம்பிக்கை உணர்வை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
அவ்வாறு எடுத்தால் தடங்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் தன்னம்பிக்கை லெவல் இன்று சற்று குறைவாகவே இருக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை.
தொழிலைப் பொறுத்தவரை என்று பணியில் உங்களுக்கு வளர்ச்சி ஏதும் இல்லை. பணிகள் செய்யும் இடத்தில் தவறு காரணமாக உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு நீங்கள் உள்ளாக நேரிடும் எனவே பணி இடத்தில் அதீத கவனத்தோடு செயல்படுங்கள். நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக உங்களுக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
தேவையற்ற பொறுப்புக்களால் பண செலவு அதிக அளவு ஏற்படும் எனவே பணத்தைக் கையாளுவதில் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை சம்பந்தமான தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பொருட்களை உண்பதை நீங்கள் தவிர்த்து விடுதல் நல்லது. சூடான ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இன்றைக்கு இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகளவு காணப்படாது. மகிழ்ச்சியற்ற நாளாக இந்த நாள் உங்களுக்கு அமைந்துள்ளதால் சூழ்நிலைகளைப் பார்த்து நீங்கள் எதையும் செய்ய திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிட்டு செயலாற்றினாலும் உங்களுக்கு அந்த அளவு காரிய வெற்றி கிடைக்காது.
நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பயணத்தில் உங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. எனவே கடுமையான சூழ்நிலையை சந்திக்க கூடிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை தக்க சமயத்தில் உணவை உட்கொள்ள வேண்டும் இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி செரிமான தொல்லையிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
இன்று அற்புதமான நாளாக கடக ராசி நேயர்களுக்கு இருப்பதால் உங்கள் விருப்பங்களை நீங்கள் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள இயலும். மகிழ்ச்சி கலந்த இருக்கக்கூடிய இந்த நாளில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகள் அனைத்தும் வெற்றி தருவதோடு நிறைய பயன்களை உங்களுக்கு அள்ளித் தரும்.
மேலும் இன்றைய நாள் உங்கள் வளர்ச்சியை தூண்டி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் கடுமையான திருப்தி காணப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.
புதிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தாலும் அதையும் முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு உள்ளது. நிதி நிலைமையை பொருத்தவரை உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாக காணப்படுவதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் பக்கம் இன்று இருக்கும். அதிகமாக சம்பாதிக்கக்கூடிய நிலையை இன்றைய நாள் உங்களுக்கு உருவாக்கித் தரும்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை சீராக இருக்கும். மனநிலையும் மிக ஆரோக்கியமாக இருக்கும் ஆரோக்கியத்தில் எந்த குழப்பமும் இல்லை.
சிம்மம்
இன்று அமைதியாக இருக்க வேண்டும் என்று சிம்ம ராசி நேயர்கள் நினைத்தாலும் அமைதியின்மை தான் உங்களுக்கு அதிகமாக இருக்கும். எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும் நம்பிக்கை தரும் எண்ணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வது தான் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை இருப்பதால் குறைவான வாய்ப்புகள் தான் வந்து சேரும். அதிக பணிகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உற்சாகம் இருக்காது.
நிதி நிலைமையை பொருத்தவரை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழுவது போல உங்களது சம்பாத்தியம் குறைந்து விடும். நீங்கள் நினைக்கக்கூடிய பணத்தை இன்று சம்பாதிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே உங்கள் மனதை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று மனதுக்குள் அவநம்பிக்கை உணர்வு அதிக அளவு ஏற்படும் இதனால் உங்கள் செயலில் நேர்மையாக நீங்கள் நடந்து கொள்வது மிகவும் முக்கியம்.
உங்களது மன அழுத்தத்தை சமாளிக்க இன்றைய நாள் நீங்கள் தியானத்தை மேற்கொண்டு இறைவழி பாட்டை செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தொழிலைப் பொறுத்தவரை உங்கள் பணியிடச் சூழலில் சுமூகமான நிலை இருக்காது. இறுக்கமான மனநிலையை இது ஏற்படுத்துவதால் பணி செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் பணிகளை செய்யும்போது திட்டமிட்டு செயல்படுவது சிறப்பாக இருக்கும்.
நிதி நிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் தான் இருக்குமே ஒழிய பணவரவு இருக்காது. பண வரவை பெறுவது சற்று கடினமான ஒன்றுதான்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்
இன்று எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு அமைதியுடனும் திருப்தியுடனும் நீங்கள் இருந்தால் இந்த நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இல்லை என்றால் அப்படியே எல்லா நிகழ்வும் தேங்கிவிடும்.
முக்கியமான செயல்களை தள்ளிப் போட்டுவிட்டு இருப்பது சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறித்த நேரத்தில் உங்களால் பணிகளை செய்ய முடியாது. மன இறுக்கத்தின் காரணமாக மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்படும்.
நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்பத்திற்காக பண செலவு அதிக அளவு செய்ய வேண்டி இருப்பதால் உங்களது பொறுப்புக்கள் அதிகமாகி காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் தந்தையின் உடல் நிலையில் அதிக அக்கரையை காட்டுங்கள் உங்களுக்கு பண செலவு நேரிடலாம். கவலையை மறக்க இறை வழிபாட்டில் புத்தியை செலுத்துங்கள்.
விருச்சிகம்
நம்பிக்கை மிக்க விருச்சிக ராசிக நேயர்களே இன்று முன்னேற்றகரமான நாளாக அமைந்திருப்பதால் உங்களுக்கு எதிலும் வெற்றி அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தைரியத்தோடும், உறுதியோடும் செயல்பட்டால் வெற்றி உங்கள் கால் அடியில் வந்து சேரும்.
தொழிலை பொறுத்தவரை நீங்கள் எடுக்கும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணிகளில் உங்கள் நேத்தி வெளிப்படுவதால் உங்களை பாராட்டாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு உங்கள் தரத்தை நீங்கள் உறுதி செய்து விடுவீர்கள்.
நிதி நிலையில் பொருத்தவரை வங்கிகளில் உங்கள் இருப்பு அதிகரிக்கும் அதனால் நல்ல காரியங்களுக்காக பணங்களை நீங்கள் பயன்படுத்த முன் வருவீர்கள்.
ஆரோக்கியத்தை பொறுத்த வரை தைரியமாக இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திலும் அதே தைரியத்தை கடைபிடிக்கலாம் எந்தவித குறைபாடும் உங்கள் ஆரோக்கியத்தில் இன்று ஏற்படாது.
தனுசு
நம்பிக்கை அதிக அளவு தன்மேல் வைத்திருக்கும் தனுசு ராசி அன்பர்கள் இன்று தைரியமும் உறுதியும் கொண்டு இருப்பதால் முன்னேற்றம் மிக்க நாளாக இந்த நாள் உங்களுக்கு ஏற்றத்தை அளிக்கும். தன்னம்பிக்கை உள்ள உங்களுக்கு எதிலும் வெற்றிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள் புத்துணர்ச்சியுடன் நீங்கள் திட மனதுடன் எல்லா செயல்களையும் திறமையுடன் செய்வதால் தொழிலில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் பணம் அதிகமாக இருப்பதால் அதிர்ஷ்டமான நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குழப்பமும் இல்லை உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல்வாகு இன்று இருக்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சாதாரண நாளாகத்தான் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானது. கடினமான பணிகளை எளிதில் ஆற்றுவது எப்படி என்று கற்றுக் கொண்டால் அது இன்றைய நாளுக்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தொழில் நிமித்தமாக நீங்கள் செயல்படும்போது அதீத கவனம் மற்றும் விழிப்புணர்வு அவசியம் தேவை. சின்ன சின்ன தடைகள் உங்கள் தொழிலில் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதால் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.
எல்லோரிடமும் சமூகமாக பழகுங்கள் நிதி நிலையை பொறுத்த வரை பணம் தட்டுப்பாடாகவே இருப்பதால் செலவுகளை சற்று குறைத்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். அதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
ஆரோக்கியத்தில் உங்களுக்கு இன்று சளி மற்றும் இருமல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூருகள் உள்ளதால் உங்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்படையும். எனவே பதட்டம் வேண்டாம்.
கும்பம்
மந்தமான நாளாக திகழக்கூடிய இன்று கும்ப ராசி அன்பர்கள் தைரியம் இழந்து காணப்படுவார்கள். நேர்மறை சிந்தனை மறைய கூடிய சூழ்நிலையில் இருப்பதால் அந்த நேர்மறை சிந்தனை உருவாக்கக்கூடிய மன ஆற்றலை நீங்கள் உங்கள் மனதில் கொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தொழில் நிமித்தமாக நீங்கள் உங்கள் சக பணியாளர்களுடன் நல்ல உறவில் இருப்பது சிறப்பாக இருக்காது. அவர்கள் உங்களிடம் தவறாக நடக்க முயல்வார்கள். எனவே உங்கள் அணுகுமுறையை சற்றே மாற்றினால் மட்டுமே சிறந்த வழி கிடைக்கும்.
நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பல இழப்புக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கையாளும்போது கவனத்தோடு கையாள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சற்று குறை உள்ளது எனவே பதட்டம் உங்களுக்கு அதிகரிக்கும் உடல் நலத்தை அதிகரிக்க பிரார்த்தனை மற்றும் தியானத்தை மேற்கொள்வது அவசியம்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றகரமான நாளாக இருப்பதால் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து சேரும். அதை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தகவல் தொடர்பு மூலம் நிறைய சாதிக்கக்கூடிய வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.
தொழிலைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் வருவதால் பயணம் செய்வதற்கான வாய்ப்பு அல்லது வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. முன்னேற்றத்திற்காக இந்த நாளை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்பத் தேவைகளுக்காக பண செலவை செய்வீர்கள். பணத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு குழப்பமும் இல்லை. தேவையான அளவு உங்களிடம் பணம் வந்து சேரும்.
ஆரோக்கியமும் அதுபோலவே உங்களிடம் இருப்பதால் எதையும் நீங்கள் துணிந்து செய்யலாம் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.